“நீங்கள் இந்த நாட்டவர் இல்லை போலிருக்கிறதே!”

Viruvirupu, Friday 06 May 2011, 02:28 GMT
ஒரு புதுவிதமான பிரச்சினை இது. தாங்கள் எந்த நாட்டவர் என்று இவர்களுக்குத் தெரியும்... ஆனால், விஷயம் அந்த நாட்டுக்குத் தெரியாது!

மேலை நாடுகள் சிலவற்றில் இன்னமும் குடியுரிமை பெறாத தமிழர்கள் வசிக்கிறார்கள். தமிழர்கள் மாத்திரமல்ல, வேறு இனத்தவர்கள் பலரும் அப்படி வசிக்கிறார்கள். தமிழர்களை நாம் கூறியது உதாரணத்துக்கு. இவர்கள் தமக்கு ஏதோ ஒரு காலத்தில் அந்த நாட்டில் குடியுரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்தப் புதிய நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆட்டோமாட்டிக்காக குடியுரிமை கொடுக்கும் நடைமுறையும் பல மேலை நாடுகளில் உண்டு.

இவர்களில் அனைவருக்குமே தாம் பிறந்த நாட்டில் குடியுரிமை உண்டு. ஏதோ காரணத்துக்காக அந்தக் குடியுரிமை வேண்டாம் என நிராகரித்துவிட்டுப் புதிய நாடு ஒன்றில் குடியேறி இங்கு பிரஜாவுரிமைக்காகக் காத்திருப்பவர்கள் இவர்கள். நிலைமை தலைக்குமேல் போனால் இவர்களால் தமது தாயகத்துக்குச் செல்ல தமது குடியுரிமையைப் பயன்படுத்த முடியும்.

மொத்தத்தில் இவர்களுக்கு ஏதோ ஒரு இடத்தில் குடியுரிமை இருக்கிறது. அவர்கள் பிறப்பால் எந்த நாட்டவர் என்ற அடையாளம் இருக்கிறது.

மியன்மாரிலிருந்து நாட்டின் எல்லையைக் கடந்து காட்டுப் பாதையூடாக தாய்லாந்தின் நகரங்களுக்கு வந்து சேர்கிறார்கள்.

ஆனால் பல லட்சக்கணக்கான மக்கள் எந்த நாட்டு குடிமக்கள் என்பது அவர்களுக்கே தெரியாமல் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இவர்களுக்கு எந்தவிட அடையாளமும் கிடையாது.

இவர்கள் ஏதோ ஒரு நாட்டில் பிறந்திருக்க வேண்டுமல்லவா? அந்த  நாடுகளால் புறக்கணிக்கப்பட்டார்களா? அல்லது மறக்கப்பட்டார்களா?

இவர்களது குழந்தைகள் பள்ளிக்கு செல்லவோ, ஏதாவது ஒரு சொத்தை வாங்கவோ இவர்களுக்கு உரிமை இல்லை. இவர்கள் இருக்கும் நாட்டில்  தர்தலில் வாக்களிக்கவோ, இருக்கும் நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு பயணம் செய்யவோ இவர்களால் முடிவதில்லை. அருகில் இருக்கும் ஒரு நகரத்திற்கு கூட இவர்களால் செல்ல முடிவதில்லை. இவர்களுக்கு மனிதர்களுக்கு உண்டான அடிப்படை தேவைகள் கிடைப்பதில்லை. குறிப்பாக வீடு என்று சொல்லிக்கொள்ள இவர்களுக்கு ஒரு இடமில்லை.

இவர்களுக்கு ஏன் குடியுரிமை ஏன் இல்லை? இவர்களது பிரச்சனையின் ஆணிவேர் எது? இவற்றையெல்லாம் யாரும் கண்டு கொள்வதில்லை. சுருக்கமாகச் சொன்னால் மனித இனத்தால் இவர்கள் மறக்கப்பட்டவர்கள்!

இப்படிப்பட்ட மக்கள் சுமார் 20 லட்சம் பேர் தாய்லாந்து நாட்டில் இருக்கிறார்கள். இவர்கள் இன ரீதியாக அங்குள்ள சிறுபான்மைக் குழுக்களைச் சேர்ந்தவர்களாக (மலைவாழ் பழங்குடியினர்) இருக்கிறார்கள். ஒருவேளை, உலகில் நாடற்றவர்களில் அதிகமானோர் இவர்களாகத்தான் இருக்கக்கூடும்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் தாய்லாந்தின் மியான்மார் நாட்டு எல்லைப் பகுதியில் பிறந்தவர்கள். தாங்கள் தாய்லாந்தில்தான் பிறந்தோம் அல்லது தங்களது பெற்றோர் தாய்லாந்தில்தான் பிறந்தனர் என்பதற்கான ஆவணங்கள் ஏதும் இவர்களிடம் இல்லை.

மே-லா அகதிகள் முகாம், தாய்லாந்து.

“எனது அனைத்து உரிமைகளும், இன்னும் சொல்லப்போனால் எதுவுமே, எப்போதுமே எனக்குக் கிட்டவில்லை” என்கிறார் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான, 38 வயது சய்தா யெங் கயூதாம், இவர் ஒரு தோட்டக்காரராக வேலை பார்த்து வருகிறார். “நான் எங்கும் போக முடிவதில்லை. அடையாளம் ஏதும் இல்லாத காரணத்தால் ஆஸ்பத்திரிக்குகூட செல்ல முடிவதில்லை. வியாபாரம் செய்ய முடியவில்லை. படிக்க முடியவில்லை. நாங்கள் எங்களுக்குரிய வேலையை தேர்ந்தெடுக்க முடியவில்லை. மற்றயவர்களுக்கு வேலை செய்துகொடுக்கும் தொழிலாளியாகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது” என்கிறார் அவர் ஏக்கத்துடன்.

“இங்குள்ள மற்றவர்களுக்கு கிடைக்கும் அடிப்படை வசதிகள் ஏன் எனக்கு கிடைக்கவில்லை?” என்று கேள்வி அவர் எழுப்புகிறார் “நான் இந்த நாட்டின் குடிமகனாக இருந்திருந்தால், எனது கல்வியை முடிந்திருக்கலாம். நான் ஏற்கனவே ஒரு முதுநிலை பட்டத்தை வாங்கியிருப்பேன். இந்த நாட்டின் குடிமக்களாகவுள்ள எனது நண்பர்களில் சிலர் முதுநிலை பட்டதாரிகளாக இருக்கிறார்கள்” என்றும் அவர் கொதிக்கிறார்.

இந்த சய்தாயெங்கை போன்ற பலர் உலகமயமாக்கல் யுகத்தில் அதிகரித்து கொண்டு வருகிறார்கள். குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் இது போன்ற மக்களுக்கு குடியுரிமை அளிப்பது அல்லது பறிப்பது போன்றவை அரசியல் ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

“மக்கள் தங்கள் குடியுரிமையை பெற ஜனநாயகம் வழிவகுக்குகிறது. இது மிக முக்கியமான சமூக மற்றும் அரசியல் அந்தஸ்து. அப்படிப்பட்ட இந்த குடியுரிமையை தங்களது அரசியல் எதிரிகளை தேர்தலில் தோற்கடிக்க சில அரசியல் கட்சிகள் அவற்றை கருவிகளாக பயன்படுத்தி வருகின்றன” என்கிறார் ஜேம்ஸ் கோல்ட் ஸ்டான். இவர் ஓபின் சொசைட்டி ஜஸ்டிஸ் இனிஷியேட்டிவ் என்ற அமைப்பின் நிர்வாக இயக்குநரான இருக்கிறார்.

தற்போது உலகத்தில் 1 கோடியே 50 லட்சம் மக்கள் நாடற்றவர்களாக இருக்கிறார்கள். இது ஒரு உத்தேசமான கணக்குத்தான். சரியாகப் பார்க்கப் போனால் எவ்வளவு பேர் நாடற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது.

Follow viruvirupu on Twitter
LATEST UPDATES
பிரீமியம் கட்டுரைகள் Ⓟ அடையாளத்துடன்
MH17-க்கும் இதுதான் நடந்ததா? வானில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்ட KAL007 மர்மம்-1Ⓟ Thursday 24 July 16:32 GMT
சி.ஐ.ஏ. காட்டுக்குள் நடத்திய ரகசிய சிறைச்சாலை கோர்ட்டில் அம்பலம்! சங்கேதப் பெயர் ‘குவாட்ஸ்’!!Ⓟ Thursday 24 July 14:50 GMT
அன்று எம்.ஜி.ஆரிடம் கணக்கு கேட்ட கருணாநிதியிடம் இன்று சொத்து கணக்கை கேட்கிறார் கட்ஜு!Ⓟ Thursday 24 July 14:04 GMT
வைகைச்செல்வனின் ஆதரவு நிர்வாகிகள் அதிரடி நீக்கம்! விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆதிக்கம்!!Ⓟ Thursday 24 July 13:52 GMT
இன்று காணாமல் போய், தேடப்பட்டு வருவதாக கூறப்பட்ட அல்ஜீரிய விமானம் விபத்துக்குள்ளானது! Thursday 24 July 13:34 GMT
பாகிஸ்தான் விஞ்ஞானி கானின் அணுகுண்டு: ராஜதந்திர, உளவு, & வியாபார எபிசோட் – 08 Thursday 24 July 06:32 GMT
தயாநிதி – கலாநிதி சகோதரர்கள் கூண்டேறும் பாக்கியம் இதோ வருகிறது! சிக்னல் விழுந்துவிட்டது!!Ⓟ Thursday 24 July 05:58 GMT
துருக்கியில் உளவு பார்த்த 9 முன்னாள் உளவுத்துறை அதிகாரிகள் எஸ்கேப்! 105 பேர் கைது!!Ⓟ Thursday 24 July 05:48 GMT
லண்டனுக்கு மேல் பறந்த கல்ஃப்ஸ்ட்ரீம் விமானத்தை வானில் இடைமறித்த பிரிட்டிஷ் போர் விமானங்கள்Ⓟ Thursday 24 July 05:00 GMT
தமிழக அரசியல் சர்ச்சைகளில் தற்போது பரபரப்பாக அடிபடும் இந்த மார்க்கண்டேய கட்ஜு யார்? Thursday 24 July 03:11 GMT
பா.ஜ.க. அரசின் லேட்டஸ்ட் ராணுவ வியாபார ஐடியா: சாமி.. நம்ம வண்டியும் ஓடும்னு சொல்றீக?Ⓟ Thursday 24 July 03:02 GMT
‘சிதம்பர ரகசியங்களை’ டில்லியில் ‘படார் படார்’ என போட்டு உடைக்கிறது வாசன் குரூப்!Ⓟ Thursday 24 July 02:04 GMT
காசாவில் ஹமாஸ் இயக்கத்தின் மெயின் கமாண்ட் சென்டர் காலி என்கிறது இஸ்ரேல்! ஆ! அப்படியா?Ⓟ Thursday 24 July 01:39 GMT
MH17-க்கும் இதுதான் நடந்ததா? 269 பயணிகளுடன் வானில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்ட KAL007 மர்மம் Wednesday 23 July 16:55 GMT
தாய்வானில் விமான விபத்து! ரன்வேயில் 1வது லேன்டிங் தவறியபின் ஏற்பட்ட விபத்துⓅ Wednesday 23 July 16:50 GMT