சிறையிலேயும் நம்ம ராசா, ராஜாதான்!

5 நட்சத்திர ஹோட்டல் அறையிலும், 5 அடி அகலச் சிறையிலும், ராசாவுக்கு ஒரே வாழ்க்கைதான்.
Viruvirupu, Monday 30 May 2011, 06:50 GMT

• ராசாவின் அதிஷ்டம், “நீ முன்னாடி போனா.. நான் பின்னாடி வாரேன்..” என்று பாடிய அவரது முன்னாள் கூட்டாளிகள்!

திகார், இந்தியா: கோடீஸ்வரர்களுக்கே தலை கிறுகிறுக்க வைக்கும் தொகையை ஊழல் செய்த குற்றச்சாட்டில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ராசா, சிறைக்குள் மிகப் பவ்வியமாக நடந்து கொள்வதாக சர்டிபிக்கேட் கொடுக்கின்றனர் சிறை அதிகாரிகள். மற்றைய கைதிகளைப் போல ராசா முரண்டு பிடிப்பதில்லையாம்.

“சிறைக்குப் போவதானால், தனியே போகக்கூடாது. கூடவே 4 நண்பர்களுடன் போகவேண்டும். சிறைக்குள் ரம்மியாவது விளையாடலாம்” என்று ஊர்ப்பக்கத்தில் கிண்டலாகச் சொல்வார்கள். அது கிண்டலோ, சுண்டலோ, ராசாவுக்கு திகார் சிறைக்குள் பேட்மின்டன் விளையாட நண்பர்கள் இருக்கின்றனர்.

ராசா அமைச்சராக இருந்தபோது, அவருக்கு நெருக்கமான நண்பர்கள் வட்டம் ஒன்று இருந்தது. ராசாவின் அதிஷ்டம், “நீ முன்னாடி போனா.. நான் பின்னாடி வாரேன்..” என்று பாடிக்கொண்டு அந்த நண்பர் வட்டத்தில் சிலர் ராசாவோடு, திகார் ஜோதியில் கலந்து விட்டனர்.

இதனால் சிறைக்குள்ளும் ராசா நண்பர் வட்டத்துடன்தான் இருக்கிறார்.

ராசா ஊழல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் லட்சக்கணக்கான கோடி ரூபா பணத்தை வைத்து, என்ன செய்திருக்கலாம்? இந்தக் கேள்விக்கு சுவாரசியமான புள்ளிவிபரம் ஒன்று கூறப்பட்டிருந்தது.

அந்தப் பணத்தை வைத்து, இந்தியாவின் 3 மாநிலங்களில் வசிப்பவர்கள் அனைவருக்கும், ஒரு நாளைக்குத் தேவையான 3 நேர உணவும், டிபன் காபியும் கொடுக்கலாம் என்று ஒரு கணக்குச் சொன்னார்கள்.

அப்படியான தொகையை அடித்ததாகக் கூறப்படும் ராசாவுக்கு, சாப்பாட்டில் வஞ்சகம் செய்யலாமா? இதனால், அவரது வீட்டிலிருந்து தினமும் சாப்பாடு கொண்டுவர அனுமதிக்கப்பட்டிருந்தது.

முதலில் அவருக்குப் போதுமான அளவில், சிறிய டிபன் பாக்ஸிலேயே சாப்பாடு சிறைக்குள் சென்றுகொண்டிருந்தது. ஆனால், அவரது நண்பர்கள் ஒவ்வொருவராக உள்ளே வரத்தொடங்கியபோதுதான், ராசாவின் விருந்தோம்பல் பண்பு சிறையுலகத்துக்குத் தெரியவந்தது.

வந்தாரை வாழவைக்குத் தமிழகத்திலிருந்து, திகார்வரை வந்தவரல்லவா ராசா? சிறைக்கு ஒன்றாக வந்தாரைக் கைவிட்டு விடுவாரா? இதனால், நாளுக்குநாள் அவரது டிபன் பாக்ஸின் அளவு பெரிதாகிப் பெரிதாகி வந்து சேர்ந்தது. ராசாவுடன் சேர்ந்து ஊழல் செய்ததாக அடைபட்டுள்ள வட இந்தியர்களும் இப்போது தென்னிந்திய உணவுக்கு மாறிவிட்டார்களாம்.

காலையில் பூப்போல இட்லி, மெது வடை, நெய் பொங்கல், தொட்டுக்கொள்ள புதினா சட்னி என்று தொடங்கி, ராசா வீட்டுச் சாப்பாடு, ராஜோபசாரம்தான் என்கிறார்கள், கையில் நெய்மணம் மாறாத சக கைதிகள்.

மொத்தத்தில், 5 நட்சத்திர ஹோட்டல் அறையிலும், 5 அடி அகலச் சிறையிலும், ராசாவுக்கு ஒரே வாழ்க்கைதான். அதற்குப் பெயர்தான் ராஜவாழ்க்கை!

-விறுவிறுப்பு.காம் இணைத்துக்காக, ரிஷி.

Please join with VIRUVIRUPU:
VIRUVIRUPUon Google+
UPDATES
இலங்கை அரசு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனை கழட்டி விட தயாராகிறது! Saturday 25 May 13:38 GMT
Porn star Priya Rai into Tamil films! – Will Priya be the next Sunny Leone? Saturday 25 May 13:05 GMT
ராமதாஸை நலம் விசாரிக்க, ஸ்டாலினும் கனிமொழியும் சென்றார்களே… ஏன்? Saturday 25 May 12:53 GMT
பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன் இன்று பிற்பகல் சென்னையில் மரணம் Saturday 25 May 12:18 GMT
கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்! Saturday 25 May 11:55 GMT
Canada immigration alert: Good News on Sponsorship! Saturday 25 May 08:38 GMT
World’s fastest & largest smartphone launched in Dubai Saturday 25 May 07:05 GMT
ஹிஸ்பொல்லாவை அதன் குகைக்குள் வந்து தாக்கி அதிர வைக்கும் திட்டம்! Saturday 25 May 06:10 GMT
பிரிட்டிஷ் போர் விமானங்கள் எஸ்கார்ட் செய்து தரையிறக்கிய பாகிஸ்தான் விமானம்! Saturday 25 May 04:03 GMT
மருமகன் மெய்யப்பன் கைது: மாமனார் சீனிவாசன், “இந்தப் பருப்பெல்லாம் இங்கே வேகாது” Saturday 25 May 02:31 GMT