ஸ்ரீலங்கா மாணவர்களுக்கு சீன பல்கலைக்கழக அட்மிஷன்!

Viruvirupu, Saturday 18 June 2011, 07:20 GMT

செயின்ட் பீட்டர்ஸ்பேர்க், ரஷ்யா: அதிக எண்ணிக்கையில் ஸ்ரீலங்கா மாணவர்களுக்கு, சீனாவில் மேற்படிப்பை மேற்கொள்வதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும் என சீன ஜனாதிபதி ஹூ ஜின்டோ, தெரிவித்துள்ளார். தற்போது, ஸ்ரீலங்காவுக்கு வெளியே அதிகளவில் ஸ்ரீலங்கா மாணவர்கள் உயர்கல்வி பெறுவது இந்தியாவில்தான்!

ரஷ்யா சென்றுள்ள ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே, அங்கு விஜயம் செய்திருந்த சீன ஜனாதிபதியுடன், நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் திட்டங்கள் பற்றிப் பேசப்பட்டன.

அப்போது, சீன ஜனாதிபதி, “ஸ்ரீலங்கா மாணவர்கள் சீனாவில் தமது மேற்படிப்பை மேற்கொள்ள வரவேற்கப்படுகின்றனர். சீனப் பல்கலைக்கழகங்களில் ஸ்ரீலங்கா மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்குவது தொடர்பாக இலகுவான நடைமுறைகளை நாம் அறிமுகப்படுத்தவுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

University of Geosciences, சீனா.

சீனாவில் உயர் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த வருடம் மிக அதிகமான அளவில் 260,000 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவிலுள்ள 620 பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி  பயில்கின்றனர்.

சீனாவுக்கு கல்வி பயிலவரும் ஸ்ரீலங்கா மாணவர்களை ஊக்குவிக்கும் முறையில், ஸ்காலர்ஷிப் நிதியுதவிகளையும் சீன அரசு செய்துகொடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தற்போது மேற்படிப்பு படிப்பதற்காக சீனா வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்குவதற்காக, வருடத்துக்கு 800 மில்லியன் யுவான (212 மில்லியன் டாலர்) நிதியை சீனாவின் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. சீனாவின் மாநில அரசுகள், வெளிநாட்டு மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப்புக்காக 110 மில்லியன் யுவான் ஒதுக்கியுள்ளன” என்று சீனக் கல்வி அமைச்சின் வெளிநாட்டு உறவுகளுக்கான டைரக்டர் சாங் கியூகுவின் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவுடன், இந்தியாவைவிட நெருங்கிய உறவுகளை வைத்துக்கொள்ள சீனா முயன்று வருவது ஒன்றும் ரகசியமல்ல. அதன் ஒரு அம்சமாகவே, ஸ்ரீலங்கா மாணவர்களை சீன பல்கலைக்கழகங்களில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள சீனா முன்வந்துள்ளது.

தற்போது ஸ்ரீலங்கா மாணவர்கள் பலர், இந்தியாவில் மேற்படிப்பை மேற்கொள்கின்றனர். இவர்களுக்கு கல்வி விசா வழங்கும் நடைமுறையை இந்திய அரசு, கடந்தவருடம் கடுமையாக்கியுள்ளது.

• வெளிநாட்டு வேலைகள், உயர் கல்வி தொடர்பான செய்திகளில் ஆர்வமா? viruvirupu.com  ‘வெளிநாட்டு வேலை-கல்வி செய்திகள்’ பகுதியை தொடர்ந்து படியுங்கள்.

Please join with VIRUVIRUPU:
VIRUVIRUPUon Google+
UPDATES
மருமகன் மெய்யப்பன் கைது: மாமனார் சீனிவாசன், “இந்தப் பருப்பெல்லாம் இங்கே வேகாது” Saturday 25 May 02:31 GMT
விசாரணைக்கு ஆஜரான குருநாத் மெய்யப்பன் மும்பையில் கைது! விஷயம் சீரியஸ்? Saturday 25 May 02:04 GMT
ஸ்ரீசாந்தின் வீட்டுக்குள் மும்பை போலீஸ் என்று புகுந்த கன்னியாகுமரி நபர்? இயாள் யாராணு? Friday 24 May 15:34 GMT
“குருநாத் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் அல்ல!” இந்தியா சிமெண்ட்ஸ் பூசிய திடீர் சிமென்ட்! Friday 24 May 14:51 GMT
Indian-origin doctor with ‘secret camera’ inside his wristwatch jailed in UK! Friday 24 May 13:04 GMT
புகைந்தபடி வந்து எமர்ஜென்சி லேன்டிங் செய்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்! Friday 24 May 11:09 GMT
சர்வதேச சூதாட்ட தரகர் ஹைதராபாத் விமான நிலையத்தில் கைது! Friday 24 May 10:05 GMT
குவைத் நாட்டு போலீஸ் அதிகாரிக்கு தூக்கு தண்டனை! சக அதிகாரிக்கு டுமீல்!! Friday 24 May 08:54 GMT
Vijay tapping his feet like never before! Magical Dance Thalaivaa Friday 24 May 07:05 GMT
இந்தியாவின் டாடா ஸ்டீல்ஸ் பிரிட்டிஷ் பிரிவுக்கு £840 மில்லியன் நஷ்டம்! Friday 24 May 06:34 GMT