![]() |
![]() |
![]() மாட்டுக்கும், சீட்டுக்கும், இனிமேல் வரமாட்டார் திருமா!
வைத்தியர் ஐயாவின் வார்த்தைகளில் 1000 அர்த்தங்கள். திருமாவிடம் அத்துடன், பிளஸ் 1!
Viruvirupu, Wednesday 29 June 2011, 09:06 GMT
சென்னை, இந்தியா: “திருமாவளவனுக்கு என்ன குறை? எதற்காக அவர் மற்றையவர்களிடம் கையேந்த வேண்டும்? கேவலம் சீட்டுக்காக, இனி அவர் யாரிடமும் கையேந்தக் கூடாது” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் (சிரிக்காதீர்கள். சீரியசாகத்தான்) அறிவுரை கூறியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று (செவ்வாய்க் கிழமை) நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மேடையிலிருக்க, விருதுகளை தொல். திருமாவளவன் வழங்கினார். அந்தக் கூட்டத்தில் பேசிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்,“திருமாவளவன் ஏன் கான்ஷிராம்போல, மாயாவதிபோல தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடாது?” என்று கேள்வியெழுப்பினார். “திருமா எதற்காக 7 சீட்டு, 8 சீட்டுக்காக மற்றவர்கள் பின்னால் செல்ல வேண்டும்? இனி நாம் எங்கும் செல்லத் தேவையில்லை. யாரிடமும் கையேந்தத் தேவையில்லை. சேர்ந்து போராடுவோம்” என்றும் பேசினார். வைத்தியர் அய்யாவின் பேச்சு பல உள்ளர்த்தங்களைக் கொண்டது. அவரது ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் வேறு ஒரு அர்த்தம் உள்ளது. அவர் ஒரு வைத்தியர் மாத்திரமல்ல, பெரிய அறிஞரும்கூட. நம்புவது கடினமாக உள்ளதா? வைத்தியர் அய்யாவின் வார்த்தைகளையும், அதன் உள்ளர்த்தங்களையும் இதோ பாருங்கள்: • “திருமா எதற்காக 7 சீட்டு, 8 சீட்டுக்காக மற்றவர்கள் பின்னால் செல்ல வேண்டும்?”… அவரும், இவரும் ஒரே இடத்துக்குத்தானே போகவேண்டும்? அவர் 7, 8 சீட் கேட்காவிட்டால், இவருக்கு 2, 3 சீட்டாவது அதிகம் கிடைக்காதா? • “இனி நாம் எங்கும் செல்லத் தேவையில்லை”… செல்வதற்கு, ஏதாவது இடம் இருக்கிறதா? • “யாரிடமும் கையேந்தத் தேவையில்லை”… ஏந்தினால், விரட்டுவார்கள்! • “சேர்ந்து போராடுவோம்”… வேறு வழி? அடுத்த 5 வருடத்துக்கு இப்படியாவது பொழுது போகுமே! இதற்குப் பதிலளித்துப் பேசிய தொல் திருமா, “அ.தி.மு.க. ஆட்சியில், ஆடு, மாடுகளை இலவசமாகக் கொடுக்கிறார்கள். ஏன்? மீண்டும் மக்களை ஆடு, மாடு மேய்க்கச் சொல்லச் சொல்கிறார்களா? கல்வியைத் தவிர வேறு எந்த இலவசங்கள் கொடுத்தாலும் நாம் எதிர்க்க வேண்டும்” என்று முழக்கமிட்டார்! “அண்ணே.. நாம கலைஞரின் இலவச டீ.வி.யை எதிர்க்கவில்லையே” என்று அவரது கட்சியின் அப்பாவித் தொண்டன் யாராவது ஆச்சரியப்பட்டு அவரிடம் கேட்டார்களா என்பது, தெரியவில்லை. • படித்தது, பிடித்திருக்கிறதா? “விறுவிறுப்பு.காம்” இணையத்தளத்தை நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்களேன்.இவற்றை தவற விட்டீர்களா? LATEST UPDATES
|
ஸ்டார் கட்டுரைகள்
போட்டோ எஸ்ஸே
LATEST UPDATES
|