![]() |
![]() |
![]() இந்திய அணியுடன் சென்ற ‘மர்ம பெண்’ யாரென்று தெரிந்தது – மதுரா நாகேந்திரா!Viruvirupu, Sunday 29 July 2012, 14:10 GMT
ஒலிம்பிக்ஸ் துவக்க தின அணிவகுப்பில் இந்திய அணியுடன் சிவப்பு-நீல உடையுடன் நடந்து சென்ற மர்ம பெண் யார் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. மதுரா நாகேந்திரா என்ற பெண்தான் அந்த அடையாளம் காணப்படாத நபர். பெங்களூருவில் காலேஜ் முடித்த மதுரா, லண்டனில் குடியேறியவர். இந்திய அணியுடன் இவர் நடந்து சென்ற காட்சி டி.வி.க்களில் காண்பிக்கப்பட்டதை அடுத்து, யார் இவர் என்ற சர்ச்சை எழுந்திருந்தது. இவரது தோழிகள் தற்போது இவர் யாரென்று அடையாளம் காட்டியுள்ளனர். இந்திய ஒலிம்பிக்ஸ் அணியுடன் எந்த தொடர்பும் இவருக்கு கிடையாது. எப்படியோ, துவக்க நாள் அணிவகுப்பில் இந்திய அணி நின்றிருந்த இடத்தை அடைந்துவிட்ட மதுரா, இந்திய அணியுடன் நடந்து செல்ல முயன்றபோது, அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். உடனே வெளியேறுவதுபோல பாவனை செய்துவிட்டு, அணிவகுப்பு துவங்கியதும், இந்திய அணைியுடன் இணைந்து நடக்க துவங்கிவிட்டார். அணிவகுப்பு நகரத் துவங்கியபின் யாராலும் மதுராவை வெளியேற்ற முடியவில்லை. இப்போது பிரபலமாகி விட்டார். இந்திய ஒலிம்பிக் கமிட்டி அல்லது, பிரிட்டிஷ் காவல்துறை இவர்மீது நடவடிக்கை எடுக்கும் விதத்தில் சட்டம் ஏதுமில்லை. LATEST ON VIRUNEWS
|
UPDATES
|