இந்தியா

முக்கிய நகரங்களில் கலவர பீதி: 15 நாட்களுக்கு பல்க் எஸ்.எம்.எஸ். அனுப்ப தடை

Viruvirupu, Saturday 18 August 2012, 03:39 GMT

நாட்டின் பல நகரங்களிலும் வட கிழக்கு மாநிலத்தவரிடையே கலவரம் ஏற்படலாம் என்ற பீதியை கிளப்பியதில் செல்போன் மூலம் அனுப்பப்பட்ட எஸ்.எம்.எஸ். குறும் செய்திகளும் காரணம் என்று தெரிவித்துள்ள மத்திய அரசு, செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ்.களை மொத்தமாக அனுப்ப நாடு, முழுவதும் 15 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அசாமில் பழங்குடியின மக்களுக்கும் வங்கதேசத்தில் இருந்து வந்து குடியேறியவர்களுக்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்ட கலவரங்களில், அங்கு 77 பேர் பலியாயினர்.

அடுத்த 15 நாட்களுக்கு தடை!

இன்னமும் பதட்டம் தொடர்கிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து மும்பையில் கடந்த வாரம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட வன்முறையிலும் 2 பேர் பலியாயினர்.

அடுத்த கட்டமாக மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலத்தவர் தாக்கப்பட்டதாக வதந்தி பரவியது. பீதியடைந்த வட கிழக்கு மாநில மக்கள் மும்பை, பெங்களூர், ஹைதராபாத் நகரங்களில் இருந்து வெளியேற துவங்கினர். இதே வதந்தி தமிழகத்திலும் பரவியதால், வட கிழக்கு மக்கள் அச்சப்பட வேண்டாம் என முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார்.

மத்திய அரசு நடத்திய விசாரணைகளில், அதிகப்படியான மிரட்டல் தகவல்கள், செல்போன் மூலம் அனுப்பப்பட்ட எஸ்.எம்.எஸ். குறும் செய்திகள் வடிவிலேயே வந்தது, அறியப்பட்டுள்ளது.

“அடுத்த 15 தினங்களுக்கு, எம்.எம்.எஸ்.களையும் (bulk SMS), படம் மற்றும் வீடியோ காட்சிகளையும் மொத்தமாக அனுப்புவதற்கு நாடு முழுவதிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது” என மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் அறிவித்துள்ளார்.

Follow viruvirupu on Twitter
∇ LATEST UPDATES ∇
பிரீமியம் கட்டுரைகள்>Ⓟ
நாடு நாடாக உளவு வேலை: CIA-வை தவிர வேறு யார் இந்த விளையாட்டு விளையாடுவர்?-10Ⓟ Friday 28 November 15:52 GMT
இதென்ன புதுக்கதை? ISIS தலைவர் அல்-பக்தாதியை ஈராக்கிய விமானம் தாக்கியதா?Ⓟ Friday 28 November 08:00 GMT
ஆபரேஷன் இலங்கை: ராஜதந்திரத்தில் தொடங்கி துப்பாக்கி வரை சென்ற இந்தியா!-6Ⓟ Friday 28 November 00:10 GMT
‘புட்டினின் வங்கியாளர்’ (Putin’s banker) இன்டர்போல் தேடப்படுவோர் லிஸ்ட்டில்! Friday 28 November 00:02 GMT
உலகின் தீர்க்கப்படாத மர்மங்கள்: ஓக் தீவு புதையலை சுற்றி பிரமிக்க வைக்கும் தந்திர ஏற்பாடுகள்!-7Ⓟ Thursday 27 November 17:06 GMT
இந்தியாவின் வியட்நாம் – இலங்கையில் இந்திய அமைதிப் படை – 25Ⓟ Thursday 27 November 15:09 GMT
அமெரிக்காவே மிரண்டு போவதற்கு சிரியாவின் போர் விமானங்கள் செய்தது என்ன?Ⓟ Thursday 27 November 14:01 GMT
லிங்கா சுற்றி வளைத்து லைக்கா கையில்? ஆவலுடன் எதிர்பாருங்கள் அண்ணன் வேல்முருகனை!Ⓟ Thursday 27 November 09:04 GMT
இன்று சற்றுமுன் பிரிட்டிஷ் தூதரக வாகனத்துக்கு அருகே வெடித்த மோட்டார் பைக் மனித வெடிகுண்டுⓅ Thursday 27 November 07:31 GMT
காங்கிரஸில் குஷ்பு! இந்த ஆட்டத்தில் அவருக்கு ஒரு ‘பிளஸ் பாயின்ட்’ உள்ளது, தெரியுமா?Ⓟ Thursday 27 November 00:03 GMT