சேற்றுக்குள் விழுந்து, புரண்டு, அடித்து, வீழ்த்தி… சுவாரசியமாக ஒரு திருவிழா!

பகல் முழுவதும் மியூசிக். ஆண்களும் பெண்களும் ஒன்றாக கலந்து கொள்ளும் சேறு திருவிழா! விழாவில் கலந்து கொண்டவர்களை பாருங்கள்.. பாதிப் பேராவது, பெண்கள் உட்பட, போதையில்தான் உள்ளார்கள்!
Viruvirupu, Wednesday 22 August 2012, 16:54 GMT

வருடா வருடம் தென் கொரியாவில் நடக்கும் சேறு திருவிழா பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? டே-சியோன் கடற்கரையில் நடக்கும் இந்த திருவிழாவுக்கு பெயர், போர்ஜியொங் திருவிழா. கடல் கொந்தளிப்பு காலத்தில், நாள் முழுக்க நடக்கும் திருவிழாவுக்கு தென் கொரியாவின் பல பகுதிகளில் இருந்து மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்தும் வருகிறார்கள்.

முதலாவது திருவிழா துவங்கியது 1997-ல். அன்றில் இருந்து இந்த வருட திருவிழா வரை, சுமார் 2 மில்லியன் பேர் கலந்து கொண்டிருப்பார்கள் என்று ஒரு கணக்கு சொல்கிறார்கள்.

அப்படி என்னதான் உள்ளது திருவிழாவில்?

பகல் முழுவதும் மியூசிக். ஆண்களும் பெண்களும் ஒன்றாக கலந்து கொள்ளும் சேறு பாக்ஸிங், சேற்று நீச்சல், என்று துவங்கி, சேற்றுக்குள் ஒரே கும்மாளம்! பீர் ஆறுபோல ஓடும்!! முற்றிலும் வித்தியாசமான உலகம் இது.

ஜாலியான விழா என்றாலும், போர்ஜியொங் பகுதியில் எடுக்கப்படும் களி மண்ணில் ஏராளமான மினரல்கள் உள்ளதாகவும், சருமத்துக்கு அவை நல்லது என்றும் சொல்கிறார்கள். இங்கு கிடைக்கும் களிமண்ணை உடல் பூரா பூசிக்கொண்டு ஒரு நாள் முழுவதும் இருந்தால், சருமம் அழகாகவும், மிருதுவாகவும் மாறும் என்ற தியரியும் உள்ளது.

இங்கு எடுக்கப்பட்ட களி மண்ணில் தயாரிக்கப்பட்ட காஸ்மெட்டிக் பொருட்கள் தென் கொரியாவில் விற்பனையாகின்றன.

இந்த தொகுப்பில் 25 போட்டோக்கள் உள்ளன. ஒவ்வொரு போட்டோவுக்கும் விளக்கம் கொடுக்க தேவையில்லாதபடி, பார்த்தாலே புரியும். விழாவில் கலந்து கொண்டவர்களை பாருங்கள்.. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள்.. (பாதிப் பேராவது, பெண்கள் உட்பட, போதையில்தான் உள்ளார்கள்!)

சுவாரசியமாக இருக்கும்.

சேறு பூசுமுன் எடுக்கப்பட்ட சில போட்டோக்கள் உள்ளன. சேறு பூசப்பட்ட நிலையில் அநேக போட்டோக்கள் உள்ளன. பெண்கள் ஜாலியாக ஆளையாள் இழுத்து வீழ்த்துவது தொடக்கம், சேறு பூசப்பட்ட நிலையில் மல்யுத்தம் வரை பல சுவாரசியமான போட்டோக்கள் உள்ளன.

இதோ.. முதலாவது போட்டோ…

Please join with VIRUVIRUPU:
VIRUVIRUPUon Google+
UPDATES
“குருநாத் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் அல்ல!” இந்தியா சிமெண்ட்ஸ் பூசிய திடீர் சிமென்ட்! Friday 24 May 14:51 GMT
Indian-origin doctor with ‘secret camera’ inside his wristwatch jailed in UK! Friday 24 May 13:04 GMT
புகைந்தபடி வந்து எமர்ஜென்சி லேன்டிங் செய்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்! Friday 24 May 11:09 GMT
சர்வதேச சூதாட்ட தரகர் ஹைதராபாத் விமான நிலையத்தில் கைது! Friday 24 May 10:05 GMT
குவைத் நாட்டு போலீஸ் அதிகாரிக்கு தூக்கு தண்டனை! சக அதிகாரிக்கு டுமீல்!! Friday 24 May 08:54 GMT
Vijay tapping his feet like never before! Magical Dance Thalaivaa Friday 24 May 07:05 GMT
இந்தியாவின் டாடா ஸ்டீல்ஸ் பிரிட்டிஷ் பிரிவுக்கு £840 மில்லியன் நஷ்டம்! Friday 24 May 06:34 GMT
குருநாத் மெய்யப்பன் கட்டிய ரூ.1 கோடி பெட்! இவர் நிஜமாகவே சூப்பர் கிங்தான்! Friday 24 May 05:33 GMT
French Naval Ship “Jacques Cartier” arrived at the port of Colombo, Sri Lanka Friday 24 May 02:35 GMT
அன்புமணி ராமதாஸ்: “தமிழக போலீசார், சந்தடி சாக்கில்.. சந்திலே சிந்து பாடுகின்றனர்” Friday 24 May 02:26 GMT