NEWS BRIEF: இந்திய ஏவுகணை அக்னி-4, வரும் புதன்கிழமை ஏவப்படலாம்!

Viruvirupu, Monday 16 April 2012, 07:30 GMT

அணு ஆயுதம் ஒன்றை ஏந்திச் செல்லக்கூடிய இந்திய தயாரிப்பு ஏவுகணை, நாளை மறுதினம் (புதன்கிழமை) ஏவப்படலாம் என்று தெரியவருகிறது. அக்னி-5 ரக ஏவுகணை இது.

5,000 கி.மீ. ரேஞ்ச் உடைய, தரையில் இருந்து தரைக்கு (surface-to-surface) ஏவப்படக்கூடிய இந்த ஏவுகணை இதுவரை பரிசோதித்து பார்க்கப்படவில்லை.

ஏவுகணைப் பரிசோதனை எப்போது நடைபெறும் என்பது இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், ஏவப்படுவதற்கான ஏற்பாடுகள் கிட்டத்தட்ட பைனஸ் ஸ்டேஜில் இருப்பதாக தெரியவருகிறது.

ஒரிசா கரையோரமாக உள்ள வீலர் தீவில் உள்ள launch pad-4, ஏவுகணை பரிசோதனைக்காக தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா இதுவரை பரிசோதனை செய்து பார்த்த ஏவுகணைகளுக்கும், இந்த ஏவுகணைக்கும் இடையே என்ன வேறுபாடு?

இது ஏவப்படக்கூடிய தொலைவு முக்கியமாக வேறுபாடு. இதுவரை இந்தியா பரிசோதித்துப் பார்த்த அக்னி-1, 700 கி.மீ. தொலைவு செல்லக்கூடியது. அக்னி-2, 2,000 கி.மீ, அக்னி–3, அக்னி-4 ஆகியவை 3,000 கி.மீ. தொலைவு வரை செல்லக்கூடியவை.

புதிய அக்னி-5 ரக ஏவுகணையின் ரேஞ்ச், 5,000 கி.மீ.! அத்துடன் இந்த ஏவுகணை எடுத்துச் செல்லக்கூடிய pay-load, 1 டன்!

5,000 கி.மீ. ரேஞ்ச் என்பது, கண்டம் விட்டு கண்டம் (Inter-Continental) செல்லக்கூடிய ஏவுகணையாக கருதப்படும். உலகில் மிகச்சில நாடுகளிடமே, கண்டம் விட்டு கண்டம் செல்லக்கூடிய ஏவுகணைகள் உள்ளன. அப்படியான நாடுகளை ICBM (Inter-Continental Ballistic Missiles) கிளப் நாடுகள் என்பார்கள்.

நாளை மறுதினம் ஏவுகணைச் சோதனை வெற்றிகரமாக நடந்து விட்டால், இந்தியாவும் கிளப்பில் இணைந்துவிடும்.

திரும்பிப் பாருங்கள்:

கிடுகிடு அழகிரி, கிளி ஜோசியம் பார்க்காத குறை!

Please join with VIRUVIRUPU:
VIRUVIRUPUon Google+
LATEST UPDATES
Follow viruvirupu on Twitter
ஸ்டார் கட்டுரைகள்
போட்டோ எஸ்ஸே
LATEST UPDATES
இந்தோனேசியா கடலில் புலிகளின் முதலாவது ஆயுத கப்பல் மூழ்கடிக்கப்பட்ட விதம் Thursday 20 June 03:00 GMT
போட்டோ எஸ்ஸே: உத்தரகான்ட் மாநிலத்தில் கன மழை! மோசமான வெள்ளப்பெருக்கு!! Wednesday 19 June 13:08 GMT
வட கொரிய ‘பகுதி நீர்மூழ்கி’ படகுகள் ரகசியமாக தென் கொரிய கடலில் ஊடுருவல்? Wednesday 19 June 12:12 GMT
அமெரிக்கா – தலிபான் பேச்சுவார்த்தை நாளை கத்தார், தோஹா நகரில் ஆரம்பம்! Wednesday 19 June 11:16 GMT
ராஜ்ய சபாவில் ஒரு ‘சிங்கிள்’ சீட்: அதற்கு கரணம் போடும் தி.மு.க.வும், தே.மு.தி.க.வும்!! Wednesday 19 June 07:46 GMT
“விமானம் விற்றுக் கொடுத்த கமிஷனை தராமல் ஏமாற்றி விட்டார் இளவரசர்” அடேங்கப்பா டீல்! Wednesday 19 June 04:43 GMT
பாரிஸ் ஏர்-ஷோ: ரங்கநாதன் தெரு வியாபாரம் போல விமானம் வாங்க வந்த கூட்டம் இது! Wednesday 19 June 00:24 GMT
எட்வார்ட் ஸ்னோடன் ஏற்கனவே அமெரிக்காவில் சீன உளவாளியாக இருந்தாரா? Tuesday 18 June 15:30 GMT