![]() |
![]() |
NEWS BRIEF: “அமெரிக்க வெற்றி, மதுக்கடை லைசென்ஸ்!” -இலங்கை அமைச்சர்Viruvirupu, Saturday 24 March 2012, 04:53 GMT
“ஜெனீவாவில் நடைபெற்ற தேர்தலில் அமெரிக்கா பெற்ற வெற்றி, இலங்கையில் மது விற்பனைக் கடை நடத்த லைசென்ஸ் பெறுவதுபோல” என்ற அரிய கருத்தை தெரிவித்துள்ளார் இலங்கை அமைச்சர் விமல் வீரவன்சே. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக விளக்கப் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்திய அமைச்சர் வீரவன்சே, இந்த வெற்றியை வைத்துக்கொண்டு அமெரிக்காவால் எதையும் செய்துவிட முடியாது என்று மக்களுக்கு விளக்கினார். “ஜெனீவாவில் வாக்களிப்பு முடிந்து விட்டது. அங்கு நடைபெற்றது, இலங்கையில் நடக்கும் ஒரு சாதாரண தேர்தலல்ல. உலகிலே மிகப் பெரிய வல்லரசான அமெரிக்கா, உலகில் மிகச் சிறிய நாடான எமது இலங்கையை எதிர்த்து நடத்திய தேர்தல் அது. அப்படியிருந்தும் அவர்கள் (அமெரிக்கா) பெற்ற வாக்கு விகிதம் ஒப்பீட்டளவில் மிக குறைவு. எப்படியோ வென்றுவிட்டார்கள். ஆனால் அந்த வெற்றியை வைத்து அவர்களால் இலங்கையில் என்னதான் செய்ய முடியும்? எமது நாட்டிலே மது விற்பனைக் கடை வைப்பதற்கான லைசென்ஸை அரசிடம் விண்ணப்பித்து பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியும். லைசென்ஸ் கிடைத்துவிட்டால், விரும்பிய இடத்தில் கடை திறந்துவிட முடியுமா? பொதுமக்களுக்கு பிடிக்காத இடங்களில் மது விற்பனைக் கடை திறக்கக் கூடாது என்று நீங்கள் (பொதுமக்கள்) போராட்டம் நடத்துகிறீர்கள். இறுதியில் அந்த இடத்தில் மது விற்பனைக் கடை திறக்கப்படாது. அமெரிக்கா பெற்ற வெற்றியும், மது விற்பனைக் கடை லைசென்ஸ் போலத்தான். நீங்கள் போராட்டம் நடத்தினால், அவர்களால் எதுவும் செய்ய முடியாது.” என்று தமக்கு தெரிந்த விளக்கம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் அமைச்சர் வீரவன்சே. இலங்கை அரசு, இவ்வளவு விளக்கம் உடைய, திறமைசாலியான அமைச்சர் ஒருவரை, ஏன் ஜெனீவாவுக்கு அனுப்பவில்லை என்பதுதான் ஆச்சரியமான கேள்வி! LATEST UPDATES
|
ஸ்டார் கட்டுரைகள்
போட்டோ எஸ்ஸே
LATEST UPDATES
|