யுத்தம் முடிவதற்கு இரு தினங்களுக்கு முன், யுத்த முனையில் இருந்து வெளியேற விரும்பும் கடல்புலிகள் வெளியேற அனுமதிக்கப்பட்டதாக ஒரு பேச்சு உண்டு. சில கடல்புலி படகுகள் முற்றுகையை உடைத்துக்கொண்டு வெளியேறினார்கள் என்றும் சொல்லப்பட்டதுண்டு.
வன்னியின் பல பகுதிகளிலும் தளபதிகளாக இருந்தவர்கள் அனைவரும், முள்ளிவாய்க்கால் என்ற சிறிய பகுதிக்குள் இருந்தார்கள். பிரபாகரனும் அங்குதான் இருந்தார். உளவுப்பிரிவின் தலைவர் பொட்டு அம்மானும் அங்குதான் இருந்தார்.
முன்றாவது தளத்தில், ஆபரேஷன் ரூம் உள்ளது. இதற்குள்தான் யுத்த திட்டமிடல்கள் நடைபெற்றிருக்கின்றன. அருகே சிறிய சைஸில் வேறு ரூம்கள் உள்ளன. அவை மெய்ப் பாதுகாவலர்களுக்கான ரூம்கள். இந்தத் தளத்தில் இருந்து ஒரு சுரங்கப்பாதை உள்ளது.
பிரபாகரனின் வெவ்வேறு மறைவிடங்களை, உளவுத் தகவல்கள் மூலம் தெரிந்து கொண்டு குண்டு வீசிய இலங்கை விமானப்படை, இறுதிவரை புதுக்குடியிருப்பு பகுதி மறைவிடம் மீது குண்டு வீசவில்லை. காரணம், அந்த மறைவிடமே, உச்சக்கட்ட ரகசியமானதாக இருந்தது.
மதன் விகடனுக்கு எழுதிய கடிதம் யாரை மிக மோசமாகச் சித்தரித்திருக்கிறது என்றால், ஜெயா டி.வி. தலைமையைதான். மதனின் வார்த்தைகள், “அவர்கள் (ஜெயா டி.வி) அவ்வளவாக விஷயம் தெரியாத ஆட்கள்” என்பதுபோல சவுண்ட் பண்ணுகிறது.
பா.ம.க. நிறுவனர், டாக்டர் ராமதாஸ், 44 வயதில் இளைஞராகவுள்ள இளைஞரணித் தலைவர் சின்ன ஐயா அன்புமணி ஆகியோர் பேசினார்கள். இருந்தாலும் கூட்டம் ஆவலுடன் காத்திருந்தது, காடுவெட்டி குரு செய்யப்போகும் கொள்கை முழக்கத்தை கேட்பதற்குதான்.
“ராசாவை கட்சி கைவிடாது” என்ற வார்த்தையை தி.மு.க. தலைவரில் இருந்து, அமைச்சர்கள் வரை ஏன் சொல்கிறார்கள் என்று அவர் புரிந்து கொண்டிருக்கிறார். யாரும் கேட்காமல், சொல்கிறார்கள் என்றால், “கைவிட்டு விட்டார்கள்” என்று அர்த்தம்.
சிவப்பு நிறத்தைக் கண்டால் மாடு மிரளும்” என்று நம்ம கிராமங்களில் சொல்வார்கள். அதைப் பொய் என்று நிரூபித்தவர் யார் தெரியுமா? ராமராஜன்! அவரது படங்களில் சிவப்பு, ரோஸ், பிங்க், குருத்துப் பச்சை என பலபல பளபள வர்ண சட்டை அணிந்து வருவார்.
அன்றைய தினத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வருமானவரி ரெயிடுகள் நடைபெற்றன. ரெயிடு குழுக்களை அனுப்பி வைத்தவர்கள் மொத்தம் 3 உயரதிகாரிகள் என்கிறார்கள். இதில் இரண்டு அதிகாரிகளுக்கு, போயஸ் கார்டன் வீடு சிரஞ்சிவியின் மருமகனின் வீடு என்று தெரியும்.