![]() |
![]() |
![]() பிரபாகரன் உயிருடன் இல்லையா? கலும் மக்ரே சொல்லும் முடிவு!
The latest Channel 4 documentary shows the near-naked body of Prabhakaran with a gaping bullet..
Viruvirupu, Thursday 15 March 2012, 16:25 GMT
London, UK: The latest Channel 4 documentary shows the near-naked body of Prabhakaran with a gaping bullet wound on his head, subsequently smeared with mud. The forensic expert says that he appeared to have been killed by a high-velocity single shot when he was not moving.இலங்கையில் யுத்த இறுதி நாட்கள் பற்றிய பிரிட்டனின் டி.வி. சேனல் (சேனல்-4) புதிய வீடியோ தொகுப்பு வெளியாகிவிட்டது. இந்த வீடியோ தொகுப்பு எதிர்பார்ப்பை ரொம்ப பெரிய அளவில் ஏற்படுத்தி விட்டதன் காரணம், இதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட காட்சிகள் இடம்பெறலாம் என்று மீடியாக்களில் பேச்சு அடிபட்டதுதான். விறுவிறுப்பு.காமில், நேற்று நாம் வெளியிட்ட நியூஸ் ஸ்டோரியில் எழுதியிருந்ததை பாருங்கள்:
இன்று வெளியான 50 நிமிட வீடியோ தொகுப்பை நீங்கள் பார்த்திருந்தால், நாங்கள் கூறியது பலித்திருப்பதைக் காணலாம். அதே நேரத்தில், சேனல்-4 வீடியோ, பிரபாகரன் உயிருடன் இல்லை என்ற கோணத்தில் உருவாக்கப்பட்டிருப்பதையும் காணலாம். இன்னொரு விதத்தில் சொன்னால், இம்முறை வெளியான வீடியோ தொகுப்பில் உள்ளவற்றில் பல ஏற்கனவே வெளியானவை. பிரபாகரன் மற்றும், அவரது மகன் பாலசந்திரன் மரணம் தொடர்பான கன்பர்மேஷன்கள்தான் புதியவை. பிரபாகரனின் மகன் இறந்துபோன நிலையிலுள்ள காட்சியைக் காண்பித்த சேனல்-4, பாலசந்திரன் மிக நெருக்கமாக, க்ளோஸ் ரேஞ்சில் வைத்து சுடப்பட்டுள்ளதாக கூறுகிறது. அவரது உடலுக்கு அருகேயுள்ள 5 பேர், பிரபாகரனின் மகனுடன் அனுப்பப்பட்ட பாடிகார்டுகளாக இருக்கவே சாத்தியமுள்ளது என்றும் தெரிவிக்கிறது. தலையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்த நிலையில் காண்பிக்கப்படுகிறது புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல். குறிப்பிட்ட போட்டோவை ஆய்வு செய்த பாரன்சிக் நிபுணர், அதிக வேக சக்தி வாய்ந்த ஒற்றைத் தோட்டா, அவர் அசையாமல் நின்ற நிலையில் தலையில் பாய்ந்ததால், அவரது மரணம் சம்பவித்துள்ளது என்று உறுதிப் படுத்தியதாக கூறுகிறது சேனல்-4. (The forensic expert says that he appeared to have been killed by a high-velocity single shot when he was not moving) இந்த ஆவணப்படத்தின் இயக்குனர் கலும் மக்ரே, “இதில் காண்பிக்கப்படும் போட்டோக்கள் எம்மால் சரியான முறையில் ஆய்வு செய்த பின்னரே வெளியிடப்பட்டன. மதிப்பு மிக்க பாரன்சிக் நிபுணர் புரொபெஸர் டெரிக் பவுண்டர் ஆய்வு செய்து கொடுத்த தரவுகளின் அடிப்படையிலேயே, நாம் கூறுபவை உறுதி செய்யப்பட்டன. ஒரு ஊடகவியலாளன் என்ற வகையில் எனது கடமையை எப்போதும் நான் சரிவரச் செய்துள்ளேன். இப்போது இலங்கை தொடர்பிலும் அதையே செய்துள்ளேன்” என்று கூறியிருக்கிறார். இதை உறுதிப்படுத்தும்போது, தாம் காண்பிக்கும் போட்டோவில் இருப்பது பிரபாகரன்தான் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே, அவரது பெயரைக் கூறி, அவரது மரணம் எப்படி சம்பவித்தது என்பதை ஒரு புரொஃபஷனல் மீடியா உறுதிப்படுத்தும். குறிப்பிட்ட போட்டோ போலி என்றோ, அதிலுள்ள நபர் வேறு என்றோ சந்தேகம் ஏற்பட்டால், போட்டோவே நிராகரிக்கப்படும். அதுவும் இந்த ஆவணப்படம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், மற்றும் பல நாடுகளால் மேற்கோள் காட்டப்படும் நிலையில் உள்ளது. அதில் சந்தேகத்துக்குரிய ஒரு சிறிய விஷயம் இருந்தாலே, அவர்கள் இதுவரை கூறிய மற்றைய விஷயங்களும் சந்தேகத்துக்கு உரிய வகையில் உள்ளதாக எடுத்துக் கொள்ளப்படும் என்பது இந்த ஆவணப்படத்தின் இயக்குனர் கலும் மக்ரேவுக்கு நன்றாகவே தெரியும். நாம் கூறுவது ரியாலிடி. அதன்படி, பிரபாகரன் உயிருடன் இல்லை என்கிறது சேனல்-4. LATEST UPDATES
|
ஸ்டார் கட்டுரைகள்
போட்டோ எஸ்ஸே
LATEST UPDATES
|