“இல்லை” என்று சொல்லியும், உளவுத்துறை வாட்ச் பண்ணுகிறது!

Viruvirupu, Thursday 09 February 2012, 06:51 GMT

Boston, USA: The CIA is expected to maintain a large clandestine presence in Iraq and Afghanistan long after the departure of conventional U.S. troops as part of a plan by the Obama administration to rely on a spies and Special Operations forces to protect U.S. interests in the two war zones, U.S. officials said.

U.S. officials said that the CIA’s massive stations in Kabul and Baghdad will probably remain the agency’s largest overseas outposts for years.

அமெரிக்க உளவுத்துறை ஈராக், மற்றும் ஆப்கானிஸ்தானை விட்டு அடுத்த பல வருடங்களுக்கு அசையப் போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ராணுவம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பின்னரும், சி.ஐ.ஏ. அங்கு தமது பலமான தளங்களை வைத்திருக்கும் என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாஸ்டன் குளோப் வெளியிட்டுள்ள இந்த தகவலின்படி, இந்த இரு நாடுகளிலும், யுத்தத்துக்கு பிந்திய காலத்தில் அமெரிக்காவுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை சி.ஐ.ஏ. மானிட்டர் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.ஐ.ஏ. அமெரிக்காவுக்கு வெளியே வைத்திருக்கும் ஆபரேஷன் சென்டர்களில் அளவில் பெரிய மையங்கள் இருப்பது பாக்தாத்திலும் (ஈராக்) காபுல்லிலும்தான் (ஆப்கானிஸ்தான்)

இவ்விரு நாடுகளிலும் உள்ள அமெரிக்க ஆபரேஷன்கள் அனைத்தும் அடுத்த இரு வருடங்களுக்குள் முழுமையாக அகற்றப்பட்டுவிடும் என்று கொள்கை அளவில் ஒபாமா அரசு அறிவித்துள்ளது. பொதுவாகவே உளவு ஆபரேஷன்கள் ரகசிய விவகாரங்கள் என்பதால், அவை அகற்றப்பட்டு விட்டனவா, இல்லையா என்பது யாருக்கும் தெரியப் போவதில்லை.

கடந்த டிசம்பரில் அமெரிக்கப் படைகள் ஈராக்கில் இருந்து வெளியேறின என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியது. அப்போது, சி.ஐ.ஏ. பற்றிய கேள்வி எழுந்தது. “சி.ஐ.ஏ.-யும் வெளியேறிவிட்டதா?”

இதற்கு பதிலளித்த அமெரிக்க அதிகாரிகள், சி.ஐ.ஏ. தமது வழமையான (உளவு பார்க்கும்) பணிகளில் இருந்து விலகி, நாட்டை கட்டியெழுப்பும் பணிகளில் ஈடுபடும் என்று (சிரிக்காமல், சீரியசாக) பதில் சொல்லியிருந்தார்கள். அதாவது ஈராக்கில் புலி, புல் தின்னப் போகின்றது என்பது அவர்களது கூற்று. உளவு வட்டாரங்களில் இப்படியான ஆஃபிஷியல் ஸ்டேட்மென்ட்களை யாரும் சீரியசாக எடுப்பதில்லை.

ஈராக்கில் அமெரிக்க ராணுவம் வெளியேறியபின், அல்-காய்தா பலம் பெறும் என்பது மிகச் சுலபமான ஊகம். ஈராக்கிய அல்-காய்தா, அமெரிக்காவுக்கு எதிராக ஈரானுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் என்பதும் ஊகிக்கப்படக் கூடியதே. இந்த விவகாரத்தில் ஈரானிய உளவுத்துறை புகுந்து விளையாடும் என்று அடித்துச் சொல்லலாம்.

சி.ஐ.ஏ. ஈராக்குக்குள் இருந்து கவனிக்கப் போவது இந்த விவகாரத்தைத்தான். (நிச்சயமாக வீதி அமைப்பதையோ, பாலம் மேற்பார்வை பார்க்கவோ அல்ல)

ஆப்கானிஸ்தானுக்குள் இருந்து அமெரிக்கப் படைகள் இன்னமும் முழுமையாக வெளியேறவில்லை. அவர்கள் வெளியேறும்போது என்ன சூழ்நிலை நிலவுமோ, அதை வைத்துத்தான் சி.ஐ.ஏ. என்ன செய்யும் என்பதை ஊகிக்க முடியும்.

எமது ஊகம், ஆப்கானுக்குள் சி.ஐ.ஏ. தலிபான்களுடன் நெருங்கிய தொடர்பை வைத்துக் கொள்ளும். அதன் மூலம், அல்-காய்தாவை ஆப்கானுக்குள் இயங்க விடாதபடி செய்ய முயற்சிக்கும்!

Please join with VIRUVIRUPU:
VIRUVIRUPUon Google+
UPDATES
Indian-origin doctor with ‘secret camera’ inside his wristwatch jailed in UK! Friday 24 May 13:04 GMT
புகைந்தபடி வந்து எமர்ஜென்சி லேன்டிங் செய்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்! Friday 24 May 11:09 GMT
சர்வதேச சூதாட்ட தரகர் ஹைதராபாத் விமான நிலையத்தில் கைது! Friday 24 May 10:05 GMT
குவைத் நாட்டு போலீஸ் அதிகாரிக்கு தூக்கு தண்டனை! சக அதிகாரிக்கு டுமீல்!! Friday 24 May 08:54 GMT
Vijay tapping his feet like never before! Magical Dance Thalaivaa Friday 24 May 07:05 GMT
இந்தியாவின் டாடா ஸ்டீல்ஸ் பிரிட்டிஷ் பிரிவுக்கு £840 மில்லியன் நஷ்டம்! Friday 24 May 06:34 GMT
குருநாத் மெய்யப்பன் கட்டிய ரூ.1 கோடி பெட்! இவர் நிஜமாகவே சூப்பர் கிங்தான்! Friday 24 May 05:33 GMT
French Naval Ship “Jacques Cartier” arrived at the port of Colombo, Sri Lanka Friday 24 May 02:35 GMT
அன்புமணி ராமதாஸ்: “தமிழக போலீசார், சந்தடி சாக்கில்.. சந்திலே சிந்து பாடுகின்றனர்” Friday 24 May 02:26 GMT
சவுதியில் விசா இல்லாமல் 56,700 இந்தியர்கள்: சல்மான் குர்ஷித் இன்று சவுதி பயணம்! Friday 24 May 02:11 GMT