‘காங்கிரஸ் தலைவரின் பர்சனல் விவகாரம், இனி பர்சனல் அல்ல’ -உயர்நீதிமன்றம்

Viruvirupu, Saturday 21 July 2012, 04:47 GMT

ரிப்போர்ட் பகிரங்கம் ஆனால் சிக்கலா?

‘காங்கிரஸ் தலைவர் என்.டி. திவாரியின் பர்சனல் விவகாரம், இனியும் பர்சனல் அல்ல’ என்று தீர்ப்பு வழங்கியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். ரோகித் என்ற இளைஞர் என்.டி. திவாரிதான் என் தந்தை என வழக்கு தொடர்ந்த விவகாரம்தான் இது.

புகார் உண்மைதானா என்பதை உறுதி செய்ய என்.டி. திவாரி, டி.என்.ஏ சோதனை செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, என்.டி. திவாரியிடம் கடந்த மே மாதம் 29-ம் தேதி டி.என்.ஏ சோதனைக்காக ரத்தம் எடுக்கப்பட்டது. ரிப்போர்ட்டும் வந்துவிட்டது.

இந்த ரிப்போர்ட் வெளியே பகிரங்கமாவது, என்.டி. திவாரிக்கு சங்கடத்தை ஏற்படுத்தி விடும் என்பது, அவருக்கே தெரிந்துள்ளது. அதனால் அவர், “குறிப்பிட்ட டி.என்.ஏ ரிப்போர்ட்டை பகிரங்க படுத்த கூடாது. இந்த வழக்கு முடியும்வரை ரிப்போர்ட் ரகசியமாக வைக்கப்பட் வேண்டும்” என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை நிராகரித்திருக்கிறார் நீதிபதி ரேவா கேத்ரபால்.

‘‘சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவில், டி.என்.ஏ சோதனைக்காக ரத்தம் எடுப்பது, மற்றும் டி.என்.ஏ. ரிப்போர்ட்டை டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு அனுப்புவது ஆகியவை ரகசியமாக நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளது. ஆனால், விசாரணையை ரகசியமாக நடத்த வேண்டும் என கூறவில்லை. டி.என்.ஏ அறிக்கை விவரங்கள், 27-ம் தேதி நடைபெறும் விசாரணையில் பகிரங்கமாக விவாதிக்கப்படும்’’ என்கிறது அவரது உத்தரவு.

என்.டி. திவாரி இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யாவிட்டால், 27-ம் தேதி உண்மை வெளியாகும்!

Please join with VIRUVIRUPU:
VIRUVIRUPUon Google+
LATEST UPDATES
Follow viruvirupu on Twitter
ஸ்டார் கட்டுரைகள்
போட்டோ எஸ்ஸே
LATEST UPDATES
போட்டோ எஸ்ஸே: உத்தரகான்ட் மாநிலத்தில் கன மழை! மோசமான வெள்ளப்பெருக்கு!! Wednesday 19 June 13:08 GMT
வட கொரிய ‘பகுதி நீர்மூழ்கி’ படகுகள் ரகசியமாக தென் கொரிய கடலில் ஊடுருவல்? Wednesday 19 June 12:12 GMT
அமெரிக்கா – தலிபான் பேச்சுவார்த்தை நாளை கத்தார், தோஹா நகரில் ஆரம்பம்! Wednesday 19 June 11:16 GMT
ராஜ்ய சபாவில் ஒரு ‘சிங்கிள்’ சீட்: அதற்கு கரணம் போடும் தி.மு.க.வும், தே.மு.தி.க.வும்!! Wednesday 19 June 07:46 GMT
“விமானம் விற்றுக் கொடுத்த கமிஷனை தராமல் ஏமாற்றி விட்டார் இளவரசர்” அடேங்கப்பா டீல்! Wednesday 19 June 04:43 GMT
பாரிஸ் ஏர்-ஷோ: ரங்கநாதன் தெரு வியாபாரம் போல விமானம் வாங்க வந்த கூட்டம் இது! Wednesday 19 June 00:24 GMT
எட்வார்ட் ஸ்னோடன் ஏற்கனவே அமெரிக்காவில் சீன உளவாளியாக இருந்தாரா? Tuesday 18 June 15:30 GMT
உளவுத்துறை மொசாத் தலைவர் தனி விமானத்தில் போன ரகசிய ட்ரிப்! என்ன விவகாரம்? Tuesday 18 June 13:29 GMT