![]() |
![]() |
அமெரிக்க சீக்கிய கோவில் தாக்குதல்: கேர்ள் ஃபிரென்ட் வீட்டில் கிடைத்த துப்பாக்கி!Viruvirupu, Wednesday 08 August 2012, 04:27 GMT
அமெரிக்க சீக்கிய கோவிலில் சராமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் முன்னாள் கேர்ள் ஃபிரென்ட், துப்பாக்கி ஒன்றை வீட்டில் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். தெற்கு மில்வாக்கியில் உள்ள அவரது வீடு போலீஸாரால் சோதனையிடப்பட்ட போது, அங்கிருந்து இந்த துப்பாக்கி அகப்பட்டுள்ளது. மிஸ்டி குக் என்ற பெயருடைய 31 வயதான நர்சிங் மாணவி இவர். இவரது வீட்டில் எடுக்கப்பட்ட துப்பாக்கி, எந்த வகையானது என்பதை தெரிவிக்க மறுத்துள்ளது போலீஸ். அமெரிக்காவின் குறிப்பிட்ட சில மாநிலங்களில், குறிப்பிட்ட சில ரக துப்பாக்கிகள் வைத்திருப்பது சட்டவிரோதமானது அல்ல. இந்த துப்பாக்கி விவகாரத்தை போலீஸ் பிரஸ்தாபிப்பதில் இருந்து, இது சட்டவிரோதமான துப்பாக்கி என்றே ஊகிக்கலாம். சட்டத்துக்கு உட்பட்ட துப்பாக்கிகள் சிங்கிள்-ஷூட் துப்பாக்கிகள்தான். மல்டிபிள்-ஷூட் துப்பாக்கிகள் (எந்திரத் துப்பாக்கிகள்) பெரும்பாலும் சட்டவிரோதமானவை. சீக்கிய கோவிலில் வேட் மைக்கல் பஜே சராமாரியாக சுட்டுத் தள்ளியது, எந்திரத் துப்பாக்கி. போலீஸ் வெளியிட்ட தகவல்களில் இருந்து, பஜேவின் கேர்ள் ஃபிரன்ட் மிஸ்டி, முன்னரும் வேறு ஏதோ கிரிமினல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். அந்த கிரிமினல் குற்றச்சாட்டு என்ன என்பதையும் வெளியிட போலீஸ் மறுத்துள்ளது. அமெரிக்க ஊடகங்கள் துப்பறிந்த தகவல்களின்படி மிஸ்டி, வோக்ஸ் முன்னணியின் (வெள்ளை இன மக்களே உயர்ந்தவர்கள் என வலியுறுத்தும் இயக்கம்) தீவிர உறுப்பினர். இந்த இயக்கம் டல்லஸ் நகரை மையமாக கொண்டு இயங்கும், ஒரு அமைப்பு. அமெரிக்கா வெள்ளை இன மக்களால் ஆட்சி செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவது இந்த இயக்கத்தின் பிரதான தீம். மிஸ்டியின் வீட்டில் துப்பாக்கி கைப்பற்றப்பட்ட போதிலும், சீக்கிய கோவில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அவர் நேரடியாக தொடர்பு பட்டிருப்பது சந்தேகமே என்கிறார்கள். சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு அவர் வரவில்லை என்பதுடன், அந்தத தாக்குதல் திட்டமிடலில் அவர் தொடர்பு பட்டவரா என்று உறுதி செய்யக்கூடிய ஒரே நபரான பஜேவும் தற்போது உயிருடன் இல்லை. LATEST ON VIRUNEWS
|
VIRUNEWS UPDATES
|