3 நாடுகளுக்கு ‘ஆபரேஷனுக்காக’ போய் இறங்கிய உளவுத் துறையினர்!

Viruvirupu, Friday 03 February 2012, 13:30 GMT

Tel Aviv, Israel: Iranian agents are attempting to attack Israeli targets around the world in retaliation for covert operations, including the assassination of Iranian nuclear scientists, the head of Shin Bet, the Israeli security agency, has warned.

“It doesn’t matter if it’s true or not that Israel took out the nuclear scientists. A major, serious country like Iran cannot let this go on. Three attempted attacks were stoped at the last minute in Turkey, Azerbaijan and Thailand” he said.

“உலகின் வெவ்வேறு பகுதிகளில் இஸ்ரேலியர்கள் மீதான தாக்குதலை நடத்த திட்டமிட்ட ஈரானிய உளவுத்துறை, ‘ஏதோ’ காரணங்களுக்காக அவற்றை இன்னமும் நடத்தாமல் தாமதிக்கும் விஷயம் தமக்கு தெரியும் என்று கூறியுள்ளார், இஸ்ரேலிய உளவுத்துறை ஷின்-பெட் தலைவர் யோரம் கோஹன்.

சமீபத்தில் ஈரானிய அணு விஞ்ஞானி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பழிவாங்கவே, இந்தத் தாக்குதல்கள் ஈரானிய உளவுத்துறையால் திட்டமிடப்பட்டன என்றும் கூறியுள்ளார் அவர்.

“ஈரானிய அணு விஞ்ஞானியை கொன்றது இஸ்ரேல் என்று அவர்கள் (ஈரானிய உளவுத்துறை) என்ன

கடந்த மாதம் டெஹ்ரானில் ஈரானிய விஞ்ஞானி கொல்லப்பட்ட இடம்

ஆதாரங்களை வைத்து நம்புகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், ஈரானிய விஞ்ஞானியின் மர்ம மரணத்தில் சாங்களோ (ஷின்-பெட்) எமது சகோதர உளவுத்துறை மொசாத்தோ இல்லை என்பது எனக்கு நன்றாக தெரியும்” என்றும் கூறியுள்ளார் அவர்.

இன்று (வெள்ளிக்கிழமை) அவர் வெளியிட்ட தகவல்களின்படி, ஈரானிய உளவுத்துறை ஏஜென்டுகள் 3 வெவ்வேறு நாடுகளின் நகரங்களில் ஒரே நேரத்தில் இஸ்ரேலியர்களை குண்டுத் தாக்குதல்களில் கொல்லும் திட்டத்தை வைத்திருந்தனர். துருக்கி, தாய்லாந்து, அசர்பாய்ஜான் நாடுகளின் நகரங்களில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப் படுவதற்காக ஏஜென்டுகள் தயார் நிலையில் இருந்தனர்.

ஆனால், தாக்குதல் நடத்தப் போகும் விபரங்கள் இஸ்ரேலிய உளவுத்துறைக்கு தெரிந்து போனதை உணர்ந்து, தாக்குதல்களை நடத்தாமல் தாமதித்துள்ளனர்.

மேலே குறிப்பிட்ட 3 நாடுகளிலும், இஸ்ரேலியர்கள் அதிகம் நடமாடும் இடங்களில் கார் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து கணிசமான எண்ணிக்கையில் இஸ்ரேலியர்களை கொல்வதே அவர்கள் திட்டமாக இருந்தது. இதற்கான வெடிகுண்டுகளும் தயார் நிலையில் இருந்தன என்று தம்மிடம் உளவுத் தகவல் உள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார் ஷின்-பெட் உளவுத்துறை தலைவர்.

எமக்கு இந்த விபரங்கள் தெரிந்து விட்டது என்பதை அவர்களும் அறிந்துள்ளார்கள். அதையடுத்தே தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுததப்பட்டன என்பது எனது ஊகம். சிலவேளை வேறு சில காரணங்களும் அவர்களிடம் இருக்கலாம். ஆனால், தாக்குதல் நடத்த இருந்தது நிஜம்” என்றும் கூறியிருக்கிறார் அவர்.

இந்தத் தாக்குதல்கள் மேற் குறிப்பிட்ட 3 நாடுகளின் எந்த நகரங்களில் நடக்க திட்டமிடப்பட்டன என்பதையோ, தாக்குதல் இலக்கில் இருந்தவர்கள் இஸ்ரேலிய உல்லாசப் பயணிகளா, அல்லது இஸ்ரேலிய தூதரக அதிகாரிகளா என்ற விபரத்தையோ, அவர் வெளியிடவில்லை.

அநேக நாடுகளில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்களில், உளவுத்துறை அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் என்ற போர்வையில் செயற்படுவது ஒன்றும் ரகசியமல்ல. இவர் குறிப்பிடும் தாக்குதல் இலக்காக அவர்கள் இருந்திருக்கலாம் என்பதற்கே அதிக சாத்தியம் உள்ளது.

சமீபத்திய 10 பதிவுகள்
1.மே 18 நினைவுகள்: கடல்புலிகள் இறுதி யுத்தத்தில் விட்டுச்சென்ற படகுகள் (PHOTOS) Friday 18 May 15:10 GMT
2.மே 18 நினைவுகள்: யுத்தம் நடந்த முள்ளிவாய்க்கால் இன்று (PHOTOS) Friday 18 May 11:12 GMT
3.மே 18 நினைவுகள்: பிரபாகரனின் ரகசிய தரையடி மாளிகை போட்டோக்கள் Friday 18 May 06:45 GMT
4.மே 18 நினைவுகள்: பிரபாகரனின் ரகசிய தரையடி மாளிகை… அன்று! Friday 18 May 04:26 GMT
5.முதல்வர் காலில் அமைச்சர் விழ, விகடனில் இருந்து கீழே விழுந்த மதன்! Thursday 17 May 13:35 GMT
6.பா.ம.க.வின் கொள்கை முழக்கம்: “வெட்டுங்கடா… நான் சொல்றேன்…” Thursday 17 May 10:01 GMT
7.“சம்பந்தன் வாளால் கொல்லப்படுவார்” வெளிநாட்டு புலிகள் தலைவர் அறிவிப்பு! Thursday 17 May 07:38 GMT
8.முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: சென்னையில் சிங்களர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு! Thursday 17 May 06:43 GMT
9.இந்த நிமிடத்தில் நடக்கிறது, வீரபாண்டியாரின் பூலாவரி வீட்டில் ரெயிடு! Thursday 17 May 04:46 GMT
10.“ஆ.ராசாவை விட மாட்டோம்.. ஹி..ஹி.. ‘கை’விட மாட்டோமுங்க” Thursday 17 May 02:44 GMT
Follow viruvirupu on Twitter
முகப்புப் பக்கத்திலிருந்து..