உளவுத்துறை ரகசியம்: போலியான ‘நிஜ’ பாஸ்போர்ட் பார்க்கணுமா?

Viruvirupu, Monday 13 February 2012, 08:42 GMT

London, UK: Israeli Mossad spies are still using foreign passports, including those of British nationals, when conducting undercover operations abroad, according to The Times of London. According to the report, new evidence suggests that foreign nationals in Israel continue to allow the Mossad to use their passports — on many occasions willingly.

“இஸ்ரேலிய உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் ரகசிய ஆபரேஷன்களை நடந்த செல்லும்போது, வெளிநாட்டு பாஸ்போர்ட்டுகளை உபயோகிப்பது இன்னமும் தொடர்கிறது” இவ்வாறு குற்றம் சாட்டியிருக்கிறது, டைம்ஸ் ஆஃப் லண்டன் பத்திரிகை. ‘ரகசிய ஆபரேஷன்கள்’ என்று குறிப்பிடுவதில், இவர்கள் வெளிநாடுகளில் செய்யும் கொலைகளும் அடக்கம்!

பிரிட்டிஷ் பத்திரிகையின் கூற்றுப்படி, இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் உளவாளிகள் தமது நாட்டு பாஸ்போர்ட்டுகளை உபயோகிப்பது, சம்மந்தப்பட்ட நாடுகளுக்கு தெரிந்தே நடக்கிறது. மொசாத் உபயோகிக்கும் வெளிநாட்டு பாஸ்போர்ட்கள், போலியானவை அல்ல, குறிப்பிட்ட நாடுகளால் வழங்கப்பட்ட நிஜ பாஸ்போர்ட்டுகள்தான்.

ஆனால், அந்த பாஸ்போர்ட்டுகள், வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டவை.

மொசாத் ஏஜென்டுகள் உபயோகிக்கும் பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டுகள் தொடர்பாக சில தகவல்களை வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆஃப் லண்டன். பிரிட்டிஷ் பிரஜைகளாக உள்ள இஸ்ரேலியர்கள், இஸ்ரேல் செல்லும்போது அவர்களின் அனுமதியுடன் இந்த பாஸ்போர்ட்களை மொசாத பெற்றுக் கொள்கிறது. சில மாதங்கள் ‘உபயோகித்து’ விட்டு, உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைத்தும் விடுகிறது.

இப்படி தமது பிரிட்டிஷ் பாஸ்போர்ட்களை மொசாத்துக்கு ‘இரவல்’ கொடுத்த பிரிட்டிஷ் பிரஜைகளான சில இஸ்ரேலியர்களை பேட்டி கண்டு (பெயர் குறிப்பிடாமல்தான்) வெளியிட்டுள்ளது பிரிட்டிஷ் பத்திரிகை.

இதில் ஒருவர், பிரிட்டனில் பெற்றோரை விட்டுவிட்டு, இஸ்ரேலிய ராணுவத்தில் இணைந்து கொள்வதற்காக டெல்-அவிவ் சென்றவர். “ராணுவ பயிற்சி முடிந்து நான் பணியில் சேர்வதற்குமுன் இளம் பெண் ஒருவர் வந்து என்னை சந்தித்தார். எனது நாட்டுக்காக (இஸ்ரேல்) எதையும் செய்ய தயாராக இருக்கிறேனா என்று கேட்டார். நான் ஆம் என்றதும், எனது பாஸ்போர்ட்டை சில நாட்களுக்கு மொசாத் பாவனைக்கு கொடுக்க முடியுமா என்று கேட்டார்.

நான் கொடுத்த பாஸ்போர்ட், 18 மாதங்களின்பின் என்னிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. எனது பாஸ்போர்ட்டில், நான் வாழ்க்கையில் சென்றிராத துருக்கி, ரஷ்யா, அசர்பாயிஜான் ஆகிய நாடுகளின் இமிகிரேஷன் சீல்கள் காணப்பட்டன” என்று கூறியிருக்கிறார் அவர்.

இந்த பாஸ்போர்ட்டுகளை மொசாத் எப்படி, எங்கே உபயோகிக்கிறது? ஒரு உதாரணம் தருகிறோம், பாருங்கள்.

கடந்த 2010-ம் ஆண்டு துபாயில் வைத்து ஹமாஸ் இயக்க சீனியர் தலைவர்களில் ஒருவரான மஹ்மொத் அல்-மப்ஹோ கொல்லப்பட்டார். துபாய் போலீஸ் வேகமாகச் செயற்பட்டு கொலையாளிகளை வளைத்துப் பிடித்துவிட்டது. இந்தக் கொலையாளிகள் 4 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கண்டு குழம்பி விட்டது துபாய் போலீஸ்.

இந்தக் கொலையில் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்ட 10 பேர் (பெண்களும் உள்ளனர்) பிரிட்டிஷ், பிரெஞ்ச், ஜேர்மன் மற்றும் ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்டுகளில் துபாய் வந்திருந்தனர். செக் பண்ணிப் பார்த்தபோது, அத்தனையும், நிஜ பாஸ்போர்ட்டுகள். அதன்பின், இதில் மொசாத் தொடர்பு பட்டிருக்கலாம் என துபாய் போலீஸ் இலாகாவுக்கு தெரியவந்தது.

முதலில் இதில் தமக்குள்ள தொடர்பை மறுத்த இஸ்ரேல், அதன்பின் அரபு எமிரேட்ஸ் வெளியுறவு

துபாய் அல்-மபோ கொலையில் தொடர்புள்ளதாக கூறப்படும் மொசாத உளவாளிகளின் பாஸ்போர்ட் போட்டோக்கள். இவர்கள் துபாய் வருவதற்கு உபயோகித்தவை பிரிட்டிஷ், பிரெஞ்ச், ஜேர்மன், ஆஸ்திரேலியா பாஸ்போர்ட்கள்!

அமைச்சருடன் ராஜதந்திர தொடர்பை மேற்கொண்டு, “இனி, இதுபோன்ற காரியங்களை துபாயில் வைத்து செய்வதில்லை” என உறுதிமொழி கொடுத்து, தனது ஆட்கள் 10 பேரையும் மீட்டுக் கொண்டது. அரபு எமிரேட்ஸ், இதை பெரிதாக்க விரும்பாமல், அடக்கி வாசித்து, அமைதியாகி விட்டது.

அது, போலி பாஸ்போர்ட்டை வைத்து செய்யப்படும் அன்டர்-கவர் ஆபரேஷன்களில், ஆயிரத்தில் ஒன்று! மிகுதி 999-ல் பல ஆபரேஷன்கள் இன்னமும் நடந்து கொண்டுதான் உள்ளன!

சமீபத்திய 10 பதிவுகள்
1.மே 18 நினைவுகள்: கடல்புலிகள் இறுதி யுத்தத்தில் விட்டுச்சென்ற படகுகள் (PHOTOS) Friday 18 May 15:10 GMT
2.மே 18 நினைவுகள்: யுத்தம் நடந்த முள்ளிவாய்க்கால் இன்று (PHOTOS) Friday 18 May 11:12 GMT
3.மே 18 நினைவுகள்: பிரபாகரனின் ரகசிய தரையடி மாளிகை போட்டோக்கள் Friday 18 May 06:45 GMT
4.மே 18 நினைவுகள்: பிரபாகரனின் ரகசிய தரையடி மாளிகை… அன்று! Friday 18 May 04:26 GMT
5.முதல்வர் காலில் அமைச்சர் விழ, விகடனில் இருந்து கீழே விழுந்த மதன்! Thursday 17 May 13:35 GMT
6.பா.ம.க.வின் கொள்கை முழக்கம்: “வெட்டுங்கடா… நான் சொல்றேன்…” Thursday 17 May 10:01 GMT
7.“சம்பந்தன் வாளால் கொல்லப்படுவார்” வெளிநாட்டு புலிகள் தலைவர் அறிவிப்பு! Thursday 17 May 07:38 GMT
8.முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: சென்னையில் சிங்களர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு! Thursday 17 May 06:43 GMT
9.இந்த நிமிடத்தில் நடக்கிறது, வீரபாண்டியாரின் பூலாவரி வீட்டில் ரெயிடு! Thursday 17 May 04:46 GMT
10.“ஆ.ராசாவை விட மாட்டோம்.. ஹி..ஹி.. ‘கை’விட மாட்டோமுங்க” Thursday 17 May 02:44 GMT
Follow viruvirupu on Twitter
முகப்புப் பக்கத்திலிருந்து..