இலங்கைக்கு எதிராக ஓட்டு: ஜெயலலிதா பிரதமருக்கு சொன்னது என்ன?!

Viruvirupu, Friday 23 March 2012, 07:06 GMT

சமீபகாலமாக எதிரும் புதிருமாக கருத்துக்களையே மத்திய அரசும், தமிழக அரசும் கூறிவருவது வழக்கமாக இருந்தது. ஒரு சேஞ்ச்சாக, ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டு, இந்தியாவால் ஓட்டளிக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக இந்தியப் பிரதமரும், தமிழக முதல்வரும் ஆளையாள் இடிக்காமல் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மன்மோகன் சிங் டில்லியில் செய்தியாளர்களிடம், “இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்; கண்ணியமாக வாழ வேண்டும் என்பதற்காகவே ஐ.நா.வில் அமெரிக்காவின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தோம்” என்று கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, “அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என வற்புறுத்தி, இரண்டு கடிதம் எழுதினேன். மத்திய அரசு அதை ஏற்றுக்கொண்டு, ஆதரித்து வாக்களித்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

“என்னதான் நாம் இலங்கைக்கு எதிராக வாக்களித்தாலும், இலங்கையின் இறையாண்மை பாதிக்கப்படுவதை இந்தியா விரும்பவில்லை. ஒரு விஷயத்தில் சாதக, பாதகங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இலங்கை தொடர்பாக நாம் எடுத்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானத்தை ஆதரித்துள்ளோம்” என்றார் பிரதமர்.

இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரீஸ், “இந்தத் தீர்மானமே இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக கொண்டுவரப்பட்டதுதான். இதற்கு ஆதரவாக இந்தியா வக்களிப்பது, எமது இறையாண்மையை பாதிக்கும் என்பதைவிட, நாளைக்கே உங்கள் (இந்தியாவின்) இறையாண்மையையும் பாதிக்கலாம்” என்று கூறியிருந்தார்.

முதல்வர் ஜெயலலிதா, “இலங்கை வெளியுறவு அமைச்சர், நமது வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவிடம் இந்த தீர்மானத்தை ஆதரிக்கக்கூடாது என  வற்புறுத்தினார். அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் அனைத்தும், தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தன. இந்த நிர்பந்தத்தின் பேரில் மத்திய அரசு, நேற்றைய தீர்மானத்தை ஆதரித்து ஓட்டளித்தது, எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

குறிப்பிட்ட அமெரிக்க தீர்மானத்தில், சிறியதாக ஒரு திருத்தத்தை செய்யுமாறு புது டில்லி கோரியது என்றும், அமெரிக்கா ஒப்புக்கொண்டு அந்த திருத்தத்தை செய்த பின்னரே, இந்தியா அதற்கு ஆதரவாக வாக்களித்தது என்றும் ஜெனீவா தகவல்கள் கூறுகின்றன.

இப்போது, பாரதப் பிரதமர், இலங்கை அமைச்சர், தமிழக முதல்வர் ஆகியோர் கூறியவற்றை நாம் கொடுத்த அதே வரிசைப்படி மீண்டும் ஒருமுறை, படித்துப் பாருங்கள்!

Follow viruvirupu on Twitter
∇ LATEST UPDATES ∇
பிரீமியம் கட்டுரைகள்>Ⓟ
நாடு நாடாக உளவு வேலை: CIA-வை தவிர வேறு யார் இந்த விளையாட்டு விளையாடுவர்?-10Ⓟ Friday 28 November 15:52 GMT
இதென்ன புதுக்கதை? ISIS தலைவர் அல்-பக்தாதியை ஈராக்கிய விமானம் தாக்கியதா?Ⓟ Friday 28 November 08:00 GMT
ஆபரேஷன் இலங்கை: ராஜதந்திரத்தில் தொடங்கி துப்பாக்கி வரை சென்ற இந்தியா!-6Ⓟ Friday 28 November 00:10 GMT
‘புட்டினின் வங்கியாளர்’ (Putin’s banker) இன்டர்போல் தேடப்படுவோர் லிஸ்ட்டில்! Friday 28 November 00:02 GMT
உலகின் தீர்க்கப்படாத மர்மங்கள்: ஓக் தீவு புதையலை சுற்றி பிரமிக்க வைக்கும் தந்திர ஏற்பாடுகள்!-7Ⓟ Thursday 27 November 17:06 GMT
இந்தியாவின் வியட்நாம் – இலங்கையில் இந்திய அமைதிப் படை – 25Ⓟ Thursday 27 November 15:09 GMT
அமெரிக்காவே மிரண்டு போவதற்கு சிரியாவின் போர் விமானங்கள் செய்தது என்ன?Ⓟ Thursday 27 November 14:01 GMT
லிங்கா சுற்றி வளைத்து லைக்கா கையில்? ஆவலுடன் எதிர்பாருங்கள் அண்ணன் வேல்முருகனை!Ⓟ Thursday 27 November 09:04 GMT
இன்று சற்றுமுன் பிரிட்டிஷ் தூதரக வாகனத்துக்கு அருகே வெடித்த மோட்டார் பைக் மனித வெடிகுண்டுⓅ Thursday 27 November 07:31 GMT
காங்கிரஸில் குஷ்பு! இந்த ஆட்டத்தில் அவருக்கு ஒரு ‘பிளஸ் பாயின்ட்’ உள்ளது, தெரியுமா?Ⓟ Thursday 27 November 00:03 GMT