டில்லி குண்டு வெடிப்பு புலனாய்வு: போலீஸ் ‘கதை’ சுவாரசியமாகதான் உள்ளது!

Viruvirupu, Thursday 05 July 2012, 06:40 GMT

டில்லியில் நடத்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு சந்தேக நபராக கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் சையத் மொஹமெட் காஸ்மியை விசாரித்ததில், குண்டு வெடிப்பு தொடர்பான தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறுகிறது டில்லி போலீஸ்.

டில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரக ராஜதந்திரியை குறிவைத்து நடத்தப்பட்ட அந்தத் தாக்குதல், ஈரானிய உளவுத்துறையின் ஒரு பிரிவினரால் நடத்தப்பட்டது என்பதை காஸ்மி ஒப்புக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் பத்திரிகையாளர் காஸ்மி.

காஸ்மியை விசாரித்தபோது கிடைத்த தகவல்களின்படி, ஈரானிய உளவுத்துறையைச் சேர்ந்த ஹோஷங்க் அஃப்ஷார் ஈரானி என்ற நபரே, காந்த வெடிகுண்டை தூதரக காரில் ஒட்ட வைத்தாராம்.

இந்தத் தாக்குதல் முதலில் ஜனவரி 22-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு, ஏதோ காரணங்களுக்காக பிற்போடப்பட்டது என்றும், தெரிய வந்துள்ளதாம்.

பத்திரிகையாளர் காஸ்மியின் போன் ரிக்கார்டுகளை பார்த்தபோது, 2011-ம் ஆண்டு மே மாதத்தின்பின் ஈரானிய உளவுத் துறையினருடன் அவருக்கு தொடர்பு இருக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

ஆனால், அந்தக் காலப்பகுதியில்தான் அவர் ஈரான் சென்றிருந்தார். ஈரானில் வைத்து அவர், ஈரானிய உளவுத் துறையினரைச் சந்தித்தார் என்கிறது போலீஸ்.

டில்லியில், பத்திரிகையாளர் காஸ்மியை விடுவிக்க போரி போராட்டம்

ஈரானிய உளவுத்துறை அதிகாரி சையத் அலி மாஹ்டியன் என்பவரே, பத்திரிகையாளர் காஸ்மியின் தொடர்பாளராக செயற்பட்டார் எனவும், அவரிடம் இருந்தே காஸ்மிக்கு உத்தரவுகள் வந்தன எனவும் போலீஸ் கூறுகிறது.

இந்தத் தாக்குதலை நடத்தியது, யார் என்பதில் லேசான குழப்பம் ஒன்று உள்ளது. இவர்கள் பெயர் குறிப்பிடும் ஆட்கள் ஈரானிய உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள் என்றாலும், சையத் அலி மாஹ்டியன், உளவுத்துறையின் பிரதிநிதியாக, இஸ்லாமிய புரட்சிப் படையில் இருப்பவர். ஹோஷங்க் அஃப்ஷார் ஈரானி, ‘நிரு-யி குவோட்ஸ் (Niru-ye Qods) படையைச் சேர்ந்தவர். இந்தப் படை, ஈரானிய உளவுப் பிரிவால் வெளிநாடுகளில் இயக்கப்படுவது.

டில்லி போலீஸ் விசாரித்துவரும் சையத் மொஹமெட் காஸ்மி, இந்தியப் பத்திரிகையாளர்.

முதலில் கூறப்பட்ட இருவரும் ஈரானில் உள்ளார்கள். அவர்களை இந்திய அதிகாரிகள் விசாரணை செய்யாமல், இந்தியப் பத்திரிகையாளர் காஸ்மி மீது எந்த நீதிமன்றத்திலும் குற்றத்தை நிரூபிக்க முடியாது!

Please join with VIRUVIRUPU:
VIRUVIRUPUon Google+
LATEST UPDATES
Follow viruvirupu on Twitter
ஸ்டார் கட்டுரைகள்
போட்டோ எஸ்ஸே
LATEST UPDATES
போட்டோ எஸ்ஸே: உத்தரகான்ட் மாநிலத்தில் கன மழை! மோசமான வெள்ளப்பெருக்கு!! Wednesday 19 June 13:08 GMT
வட கொரிய ‘பகுதி நீர்மூழ்கி’ படகுகள் ரகசியமாக தென் கொரிய கடலில் ஊடுருவல்? Wednesday 19 June 12:12 GMT
அமெரிக்கா – தலிபான் பேச்சுவார்த்தை நாளை கத்தார், தோஹா நகரில் ஆரம்பம்! Wednesday 19 June 11:16 GMT
ராஜ்ய சபாவில் ஒரு ‘சிங்கிள்’ சீட்: அதற்கு கரணம் போடும் தி.மு.க.வும், தே.மு.தி.க.வும்!! Wednesday 19 June 07:46 GMT
“விமானம் விற்றுக் கொடுத்த கமிஷனை தராமல் ஏமாற்றி விட்டார் இளவரசர்” அடேங்கப்பா டீல்! Wednesday 19 June 04:43 GMT
பாரிஸ் ஏர்-ஷோ: ரங்கநாதன் தெரு வியாபாரம் போல விமானம் வாங்க வந்த கூட்டம் இது! Wednesday 19 June 00:24 GMT
எட்வார்ட் ஸ்னோடன் ஏற்கனவே அமெரிக்காவில் சீன உளவாளியாக இருந்தாரா? Tuesday 18 June 15:30 GMT
உளவுத்துறை மொசாத் தலைவர் தனி விமானத்தில் போன ரகசிய ட்ரிப்! என்ன விவகாரம்? Tuesday 18 June 13:29 GMT