SAMSUNG vs LG: டி.வி. தயாரிப்பில் மெகா தொழில்நுட்ப திருட்டு லீக்!

Viruvirupu, Wednesday 18 July 2012, 05:35 GMT

பூட்டோடு கோவிந்தா!

Samsung நிறுவனம், தமது தொழில்நுட்ப ரகசியத்தை போட்டி நிறுவனமான LG திருடிவிட்டது என்று புகார் கூறியுள்ளது. டி.வி. டிஸ்பிளேகளில் தற்போது பிரபலமாகி வரும் OLED தொழில்நுட்பத்தை எல்.ஜி., சாம்சங்கிடம் இருந்து திருடியது என்பதே குற்றச்சாட்டு.

இரு தினங்களுக்குமுன், எல்.ஜி. நிறுவனத்தின் 11 அதிகாரிகள் இந்த திருட்டில் தொடர்புடையவர்களாக உள்ளார்கள் என்ற தகவலை கொரிய  இணையத்தளம் யொன்ஹாப் வெளியிட்டிருந்தது. அந்த தகவலுடன் இந்த விவகாரம் சூடு பிடித்தது.

திருட்டில் ஈடுபட்ட 11 அதிகாரிகளும் கொரியாவை சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் அனைவருமே சாம்சாங் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகள் என்றும் கொரிய இணையத்தளம் கூறியிருந்தது. எல்.ஜி. நிறுவனம், இந்த 11 பேருக்கும் சகல வசதிகளையும் செய்து கொடுத்து, அதிக ஊதியத்தில் தமது தலைமைச் செயலகத்தில் உயர் பதவிகளும் கொடுத்து, அமெரிக்காவில் குடியேற வசதியும் செய்தி கொடுத்தது என்றும் கூறப்பட்டது.

சாம்சங் நிறுவனம் தென்கொரியாவில் நேற்று (செவ்வாய்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “எல்.ஜி. நிறுவனம் எமது தொழில்நுட்பத்தை திருடியதுடன், எமது நிபுணர்கள் பலரையும் ஆசை காட்டி கவர்ந்துள்ளது. இதனால் எமக்கு பல மில்லியன் வான் (கொரிய நாணயம்) நஷ்டம் ஏற்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளது.

இந்த திருட்டில் தாம் ஈடுபடவில்லை என எல்.ஜி. அறிவித்துள்ளது. “OLED தொழில்நுட்பத்துடன் கூடிய எமது 55-இஞ்ச் டி.வி.க்கள் ஜனாதிபதி விருது பெற்றுள்ளன. அப்படியிருக்கையில் இந்த தொழில்நுட்பத்தை நாம் அவர்களிடம் (சாம்சங்) இருந்து திருட வேண்டிய அவசியம் ஏதுமில்லை. எம்மீது ஆதாரமற்ற முறையில் புகார் கூறியிருப்பதால், சாம்சங்மீது வழக்கு தொடர்வோம்” என்கிறது எல்.ஜி.-யின் அறிக்கை.

இவர்கள் குறிப்பிடும் OLED தொழில்நுட்பம் என்பது, வழமையான LCD திரைகளைவிட மெல்லிய திரைகளில் டிஸ்பிளேகளை காண்பிப்பது. தற்போது இந்த டிஸ்பிளே தொழில்நுட்பம், ஸ்மார்ட் போன்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. OLED தொழில்நுட்பத்தில் டி.வி. ஸ்கிரீன்களை வெறும் 4 மி.மி. தடிப்பில் உருவாக்குகிறது எல்.டி.

2015-ம் ஆண்டில், அனைத்து டி.வி. செட்களும் OLED தொழில்நுட்பத்துக்கு மாறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please join with VIRUVIRUPU:
VIRUVIRUPUon Google+
LATEST UPDATES
Follow viruvirupu on Twitter
ஸ்டார் கட்டுரைகள்
போட்டோ எஸ்ஸே
LATEST UPDATES
ராஜ்யசபா போட்டி: டில்லியில் ராகுலின் ஆதரவு விஜயகாந்துக்கு என்று தெரியுமா? Thursday 20 June 04:57 GMT
இந்தோனேசியா கடலில் புலிகளின் முதலாவது ஆயுத கப்பல் மூழ்கடிக்கப்பட்ட விதம் Thursday 20 June 03:00 GMT
போட்டோ எஸ்ஸே: உத்தரகான்ட் மாநிலத்தில் கன மழை! மோசமான வெள்ளப்பெருக்கு!! Wednesday 19 June 13:08 GMT
வட கொரிய ‘பகுதி நீர்மூழ்கி’ படகுகள் ரகசியமாக தென் கொரிய கடலில் ஊடுருவல்? Wednesday 19 June 12:12 GMT
அமெரிக்கா – தலிபான் பேச்சுவார்த்தை நாளை கத்தார், தோஹா நகரில் ஆரம்பம்! Wednesday 19 June 11:16 GMT
ராஜ்ய சபாவில் ஒரு ‘சிங்கிள்’ சீட்: அதற்கு கரணம் போடும் தி.மு.க.வும், தே.மு.தி.க.வும்!! Wednesday 19 June 07:46 GMT
“விமானம் விற்றுக் கொடுத்த கமிஷனை தராமல் ஏமாற்றி விட்டார் இளவரசர்” அடேங்கப்பா டீல்! Wednesday 19 June 04:43 GMT
பாரிஸ் ஏர்-ஷோ: ரங்கநாதன் தெரு வியாபாரம் போல விமானம் வாங்க வந்த கூட்டம் இது! Wednesday 19 June 00:24 GMT