பட்டப்பகலில் பாதுகாவலரை கொன்றுவிட்டு கலெக்டரை கடத்தினர்!

Viruvirupu, Sunday 22 April 2012, 02:38 GMT
A day after the collector of Chhattisgarh’s Bijapur district escaped a landmine blast that killed three people in his convoy, Maoists abducted the collector of neighbouring Sukma district. Alex Paul Menon, was taken away from a meeting of villagers and officials in Manjipara village yesterday.

Raipur, India: A day after the collector of Chhattisgarh’s Bijapur district escaped a landmine blast that killed three people in his convoy, Maoists abducted the collector of neighbouring Sukma district. Alex Paul Menon, was taken away from a meeting of villagers and officials in Manjipara village of Keralapal panchayat, 18 km from Sukma district headquarters yesterday (Saturday) evening. The Maoists killed both the security guards accompanying the officer.

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் நேற்று (சனிக்கிழமை) பட்டப் பகலில் 15 நக்சலைட்டுகளால் ஒரு கிராமத்தில் வைத்துக் கடத்தப்பட்டார்.

இந்தக் கடத்தலுக்கு ஒரு தினத்துக்கு முன்னர்தான், இதே சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாபூர் மாவட்ட கலெக்டர் சென்ற வாகனத் தொடர், லேன்ட்மைன் குண்டுத் தாக்குதலில் சிக்கியது. அந்த கலெக்டர் தப்பிவிட்டார் என்ற போதிலும், அவருடன் சென்ற மூன்றுபேர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர்.

குண்டுவெடிப்பு நடைபெற்றதற்கு மறுதினம், பிஜாபூர் மாவட்டத்துக்கு அருகிலுள்ள சுக்மா மாவட்டத்தில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ள கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன், நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியை சேர்ந்தவர். இவரது பெயரில் உள்ள ‘மேனன்’ என்பது, இனத்தைக் குறிக்கும் அடையாளம் அல்ல. இவருக்கு பெயர் சூட்டியபோது, வி.கே.கிருஷ்ணமேனன், ஞாபகார்த்தமாக இவரது பெயரில் சேர்க்கப்பட்டது.

(வி.கே.கிருஷ்ணமேனன் யாரென்று தெரியாதவர்களுக்கு: அவர் சுதந்திர இந்தியாவின் பிரிட்டனுக்கான முதலாவது இந்திய ஹைகமிஷனர். சிறந்த ஒரேட்டர். ஐ.நா.வில் இந்தியாவின் சார்பில் இவர் ஆற்றிய உரைகள் மிகப் பிரபலமானவை)

சத்தீஸ்கர் மாநிலத்தின் குக்கிராமங்களில் ‘கிராம் சுராஜ் அபியான்’ என்கிற புதிய திட்டத்தின் கீழ் கிராம மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தப்பட்டார். அரசின் நடவடிக்கைகளில் வெறுப்புற்ற கிராம மக்கள் நக்சல் இயக்கத்தில் சேருவதையும், நக்சல்களுக்கு ஆதரவு தருவதையும் தடுப்பதற்கு கொண்டுவரப்பட்ட திட்டம்தான், இந்த கிராம் சுராஜ் அபியான் திட்டம்.

இந்தத் திட்டம் மக்களிடையே பிரபலம் ஆவது நக்சலைட்டுகளுக்கு கோபத்தை நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும். அதன் வெளிப்பாடே இந்தக் கடத்தல் என்று ஊகிக்கலாம்.

நேற்று மாலை இந்த திட்டத்துக்கான கூட்டம் ஒன்றுக்காக மாஞ்ஜிபாரா என்ற கிராமத்தில் இருந்தார் கலெக்டர். கூட்டத்தில் சுமார் 150 கிராமவாசிகளும், 40 அரசு அதிகாரிகளும் இருந்தனர். பொதுமக்கள் ஒரு புளிய மரத்தின் கீழ் அமர்ந்திருந்தனர்.

மாலை 4.30 மணிக்கு பொதுமக்கள் இருந்த பகுதியில் திடீரென தோன்றிய 15 நக்சலைட்டுகள், தமது கைகளில் இருந்த துப்பாக்கிகளால் வானத்தை நோக்கி சுட்டனர். இவர்கள் திடீரென எப்படி அங்கே தோன்றினார்கள் என்பதில் குழப்பமான விளக்கங்கள் கூறப்படுகின்றன. நக்சலைட்டுகள் ஏற்கனவே மக்களோடு மக்களாக கலந்து அமர்ந்து இருந்தனர் என்றுதான் அங்கிருந்த அநேகர் கூறுகின்றனர்.

கலெக்டருக்கும், 40 அதிகாரிகளுக்கும் பாதுகாப்பாக இரண்டே இரண்டு பாதுகாவலர்கள்தான் இருந்தனர். அம்ஜத் கான் என்ற பெயருடைய பாதுகாவலர் கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டார். மற்றொரு பாதுகாவலரான கிஷான் குஜார், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலைகள் நடைபெற்ற நேரத்தில், கலெக்டரும் வேறு நால்வரும் வேகமாகச் சென்று தமது வாகனங்களில் ஏறிக் கொண்டனர். ஆனால், நக்சலைட்டுகள் வாகனங்களில் வைத்தே அவர்களை மடக்கினர். “கலெக்டர் கௌன் ஹை” என்று கேட்டு, அலெக்ஸ் பால் மேனனை கடத்திச் சென்றனர்.

இதிலுள்ள சோகம் என்னவென்றால், கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் நக்சலைட்டுகளால் குறி வைக்கப்பட்டுள்ளார் என்று உளவுத்துறை தெரிவித்திருந்தது. அப்படியிருந்தும் அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகரிக்கப்படவில்லை. மற்றொரு விஷயம், இந்தக் கடத்தல் நடைபெற்ற இடத்தில் இருந்து வெறும் 4 கி.மீ. தொலைவிலேயே CRPF கேம்ப் (The Central Reserve Police Force) அமைந்திருந்தது!

தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, இந்தக் கிராமப் பகுதியில் இருந்து வெளியேறும் வீதிகள் அனைத்தையும் சீல் பண்ணியிருப்பதாக கூறுகிறது போலீஸ். சத்தீஸ்கர் மாநிலத்தின் டி.ஜி.பி. அனில் நவானி, “கடத்தப்பட்ட கலெக்டரை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கடத்தியவர்கள் அவரை வேறு மாநிலத்துக்கு கொண்டு செல்லாத வகையில் எல்லைப்புற கிராமங்கள் அனைத்தும் அலர்ட் செய்யப்பட்டுள்ளன”

சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங், உட்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை அவசர கதியில் தொடர்பு கொண்டிருக்கிறார். இவர்கள் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவார்களா, அல்லது, ஒரிசா அரசு போல சொந்தமாக டீல் பண்ணப் போகிறார்களா என்பது தெரியவில்லை.

Follow viruvirupu on Twitter
∇ LATEST UPDATES ∇
பிரீமியம் கட்டுரைகள்>Ⓟ
நாடு நாடாக உளவு வேலை: CIA-வை தவிர வேறு யார் இந்த விளையாட்டு விளையாடுவர்?-28Ⓟ Wednesday 28 January 03:54 GMT
கருணாநிதியை அதிர வைத்து, திட்டத்தையே கவிழ்த்து விட்டது ‘கைகாரர்களில்’ கைவண்ணம்!Ⓟ Wednesday 28 January 02:10 GMT
அல்-காய்தாவுக்கு துருக்கி உளவுத்துறை MIT அனுப்பிய ஆயுத ட்ரக்குகள் வசமாக சிக்கின!Ⓟ Wednesday 28 January 00:54 GMT
பொக்கோ ஹாரத்துக்கு பணம் வந்து சேரும் பாதை சி.ஐ.ஏ.-க்கு தெரியவே தெரியாதா?Ⓟ Tuesday 27 January 15:56 GMT
பசில் ராஜபக்ஷே அமெரிக்கா பறந்த ரகசியம்: இந்த இரு கதைகளையும் பாருங்கள், தலை சுற்றும்!Ⓟ Tuesday 27 January 14:49 GMT
மாவை சேனாதிராஜாவின் ‘உயிரை கொடுக்கும்’ போராட்டம் அடுத்த தேர்தல் வரை ஒத்திவைப்பு!Ⓟ Tuesday 27 January 09:11 GMT
அமெரிக்காவில் சிக்கிய ரஷ்ய உளவாளி! மீடியாக்களுக்கு உள்ளேயும் உளவு பார்த்த மூவர்!!Ⓟ Tuesday 27 January 09:08 GMT
இளங்கோவன் கையில் இருந்த QUEEN CARD-ஐ மேஜையில் கவிழ்த்து போட்ட கதை!Ⓟ Tuesday 27 January 04:02 GMT
பட்டொளி பறக்கும் கொடியுடன் பாய்ந்து வருகிறது புலி! நடுநடுங்குகிறார் சரத் பொன்சேகா!!Ⓟ Tuesday 27 January 02:52 GMT
ஈழப் போரின் இறுதி நாட்கள்-52: வெளிநாடுகளில் விடுதலை புலிகளின் இறுதி நாட்களில் நடந்தவை-5Ⓟ Tuesday 27 January 01:35 GMT