கலெக்டர் கடத்தல்: நக்சலைட் கோரிய 3 தூதர்களை அரசும் விரும்பவில்லை!

Viruvirupu, Wednesday 25 April 2012, 04:01 GMT

New Delhi, India: Two of the three mediators, named by the CPI (Maoist) to secure the release of Sukma Collector Alex P. Menon, have declined to be part of negotiations, implying that talks will not begin before the April 25 deadline set by the Maoists.

The Maoists named the former Konta MLA, Manish Kunjam of the CPI, Supreme Court advocate and Team Anna member Prashant Bhushan, and social activist B.D. Sharma as possible mediators but Mr. Kunjam and Mr. Bhushan have declined the offer. S.K. Mishra, former Chief Secretary, Chhattisgarh, and Nirmala Buch, former Secretary, Madhya Pradesh, shall mediate for the government.

கடத்தப்பட்டு பணயக் கைதியாக வைக்கப்பட்டுள்ள கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை விடுவிப்பதற்காக, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அனுப்பி வைக்குமாறு மாவோயிஸ்ட் அமைப்பு கோரிய மூவரில் இருவர், “கண்டிப்பாக பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள மாட்டோம்” என்று மறுத்துள்ளனர்.

தங்கள் சார்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த, அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த உச்ச நீதிமன்ற மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன், தேசிய எஸ்சி. எஸ்டி ஆணைய முன்னாள் தலைவர் பி.டி.சர்மா, அகில இந்திய ஆதிவாசி மகாசபாவின் தலைவர் மணிஷ் குஞ்சன் ஆகியோரை அனுப்பி வைக்குமாறு மாவோயிஸ்ட் அமைப்பு கோரிக்கை விடுத்தது.

மாவோயிஸ்ட் அமைப்பின் கோரிக்கையை ஏற்க பிரசாந்த் பூஷனும், மணிஷ் குஞ்சனும் மறுத்து விட்டனர்.

பிரசாந்த் பூஷன், “நக்சலைட்டுகளின் சில கோரிக்கைகள் நியாயமானவைதான். ஆனால், அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அப்பாவி கலெக்டர் ஒருவரின் உயிரை பணயம் வைப்பதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார்.

நியாயமானவை. நக்சலைட்டுகளின் முக்கிய பிரச்னைகளை தீர்ப்பதில் சட்டீஸ்கர் அரசு தீவிரமாக இருந்தால், எந்த பேச்சுவார்த்தையிலும் இடம் பெற தயாராக இருக்கிறேன்’’ என்று பிரசாந்த் பூஷன் கூறியுள்ளார்.

பணயக் கைதியாக உள்ள கலெக்டர் அலெக்ஸ் மேனனின் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கான மருந்துகளை எடுத்துச் செல்ல சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

பி.டி.சர்மா அளித்த பேட்டியில், “நக்சலைட்டுகளின் கோரிக்கை வெளிப்படையானது. இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு சுமுக தீர்வு காண வேண்டும். அரசு பல குற்றங்களை செய்துள்ளது. பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஏன் பிரச்னை உள்ளது என்பதற்கு முதலில் பதில் தெரிய வேண்டும்’’ என்றார். ஆனால் அவர், பேச்சுவார்த்தைக்கு செல்ல மறுக்கவில்லை.

“ஆனால், அரசு தரப்பில் இருந்து என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை” என்கிறார் அவர்.

மாவோயிஸ்ட் அமைப்பு கோரிய மூவரையும் பேச்சுவார்த்தைக்கு அனுப்புவதில் அரசுக்கும் தயக்கம் உள்ளதாக தெரிகிறது. அரசு தமது சார்பில் எஸ்.கே.மிஸ்ரா (சட்டீஸ்கரின் முன்னாள் தலைமைச் செயலாளர்) நிர்மலா புச் (மத்திய பிரதேஷ் முன்னாள் செலாளர்) ஆகிய இருவரையும் அனுப்பி வைக்க விரும்புவதாக தெரியவருகிறது.

இதனால் மாவோயிஸ்ட் அமைப்பு விதித்துள்ள காலக்கெடுவான இன்று (புதன்கிழமை) மாலைக்குள், பிரச்னை முடியப் போவதில்லை.

Please join with VIRUVIRUPU:
VIRUVIRUPUon Google+
UPDATES
ஈரான் உளவுத்துறைக்காக உளவு பார்த்த 10 உளவாளிகள் சவுதி அரேபியாவில் கைது! Wednesday 22 May 03:09 GMT
பின்லேடன் கொல்லப்பட்ட போட்டோக்கள்: சி.ஐ.ஏ. ரகசியம் காக்க அனுமதி! Wednesday 22 May 02:12 GMT
வடிவேலு புதிய படம்: ஹீரோயினை வைத்து ‘குத்தல் டயலாக்’ விடுவாரா கைப்புள்ள? Tuesday 21 May 13:57 GMT
விடுதலைப் புலி சந்தேக நபர் மும்பை விமான நிலையத்தில் கைது! Tuesday 21 May 13:18 GMT
துபாயில் பணிபுரிபவர்கள் குடும்பத்தை அங்கு அழைத்துக் கொள்ள புதிய நடைமுறை! Tuesday 21 May 12:35 GMT
அமெரிக்க விமானப்படை கான்ட்ராக்டை தட்டிச் சென்றது கில்லாடி சேல்ஸ் டீம்! Tuesday 21 May 09:53 GMT
Spy plane drone operations will go out of CIA’s hands! Tuesday 21 May 08:24 GMT
கடத்திய கப்பலை விடுவித்தது வட கொரியா! சீனா ‘செல்லமாக’ மிரட்டியதாம்!! Tuesday 21 May 07:24 GMT
இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் (பரிசாக?) கொடுத்தது யார்? Tuesday 21 May 06:34 GMT
சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் தேவைக்கு அதிக விமானிகள்! விலகினால் பாண்ட் பணம் ஃபிரீ!! Tuesday 21 May 04:34 GMT