சி.ஐ.ஏ. உளவாளிகள் போல நடித்து மொசாத் ஆட்கள் லண்டனில் செய்தது என்ன?Viruvirupu, Saturday 14 January 2012, 06:32 GMT
Washington, USA: Israeli Mossad agents posed as CIA officers in order to recruit members of a Pakistani terror group to carry out assassinations and attacks against the regime in Iran, revealed yesterday (Friday), quoting U.S. intelligence memos.American intelligence officials claims that the Mossad agents used American dollars and U.S. passports to pose as CIA spies to try to recruit members of Jundallah, a Pakistan-based Sunni extremist organization that has carried out a series of attacks in Iran and assassinations of government officials.இஸ்ரேலிய உளவுத்துறையின் ஆட்கள் சி.ஐ.ஏ. உளவாளிகள் போல நடித்து, பாகிஸ்தானிய தீவிரவாத இயக்கம் ஒன்றில் ஆட்சேர்ப்பு செய்த விவகாரம் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க உளவுத்துறை மெமோ ஒன்றில் இருந்து இந்த விபரங்களைப் பெற்றதாக பாரின் பாலிஸி ஊடகம் நேற்று தெரிவித்துள்ளது. 2007-08 காலப்பகுதியில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில், பாகிஸ்தானிய தீவிரவாத அமைப்பு ஜனுல்லாவில் இருந்தே அதன் உறுப்பினர்கள் சி.ஐ.ஏ.-க்கு என்று கூறப்பட்டு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக மொசாத்தின் ஆட்கள் அமெரிக்க பாஸ்போர்ட்டில் பயணித்திருக்கிறார்கள். இவர்களால் சேர்க்கப்பட்ட ஆட்களுக்கான ஊதியம் அமெரிக்க டாலரில் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, நிஜ சி.ஐ.ஏ. போலவே இந்த மொசாத் உளவாளிகள் செயற்பட்டுள்ளார்கள். அதைவிட பெரிய விஷயம், இந்த ஆட்சேர்ப்பு நடைபெற்றது பாகிஸ்தானில் அல்ல… லண்டனில்! ஐரோப்பாவில் சி.ஐ.ஏ.-யின் இரண்டாவது பெரிய தளம் (முதலாவது பேர்லின், ஜேர்மனியில்) இருப்பதே லண்டனில்தான்! சிங்கத்தின் மூக்கருகே நின்று சிங்கத்தின் பெயரைச் சொல்லி அலுவல் பார்த்திருக்கிறார்கள்! விஷயம் சிங்கத்துக்கு தெரிந்துதான் இருக்கிறது! லண்டனில் உள்ள சி.ஐ.ஏ. செல் ஒன்று இந்த விவகாரத்தை மணந்து பிடித்து, லாங்க்லிக்கு (தலைமைச் செயலகம்) பாஸ் செய்திருக்கிறது. அதையடுத்து வெள்ளை மாளிகைக்கான சி.ஐ.ஏ. உளவு அறிக்கையில் இந்த விபரம் இடம் பெற்றிருக்கிறது. ஆனால், இதற்கு பதிலடி கொடுக்கும் உத்தரவு எதுவும் வெள்ளை மாளிகையில் இருந்து வரவில்லை. இதனால், லண்டனில் நடந்ததை சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க வேண்டிய நிலை சி.ஐ.ஏ-வுக்கு ஏற்பட்டது. பாரின் பாலிஸிக்கு பெயர் வெளியிடாமல் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர், “நாமும் (சி.ஐ.ஏ.) மொசாத்தும் இணைந்து பல ஆபரேஷன்களைச் செய்திருப்பது உண்மைதான். ஆனால், ஈரானிய அதிகாரிகளையோ, பொதுமக்களையோ கொல்லும் பிசினெஸில் நாம் இல்லை. மொசாத்தினால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பாகிஸ்தான் ஆட்கள் ஈரானுக்கு உள்ளேயே கொலைகளைச் செய்துவிட்டு தப்பித்திருக்கிறார்கள். இப்போது பாருங்கள். ஈரானில் நடைபெற்ற சில ரகசிய வேலைகளில் கொலைப்பழி தேவையில்லாமல் எம்மீது விழுகின்றது” என்று தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை இதில் வாயை மூடிக்கொண்டு இருந்ததற்கு அரசியல் ரீதியான காரணங்கள் உள்ளன என்பதை அந்த அதிகாரி ஒப்புக்கொண்டு இருக்கிறார். இந்த விவகாரம் நேற்று கசியவிடப்பட்டதற்கும் காரணம் ஒன்று உள்ளது. கடந்த புதன்கிழமைதான் ஈரானிய அணு விஞ்ஞானி ஒருவர் டெஹ்ரானில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். விறுவிறுப்பு.காமில் “ஹாலிவூட் ஸ்டைலில் மற்றொரு விஞ்ஞானியை கொன்றது சி.ஐ.ஏ.!” என்ற தலைப்பில் புதன்கிழமை வெளியாகிய நியூஸ் ஸ்டோரியை ஒருமுறை படிக்கவும். (லிங்க் கீழே உள்ளது) அதன்பின் உங்களுக்கு புரியும், ரகசிய உளவுத்துறை மெமோ எப்படி ‘தற்செயலாக’ வெளியே வந்தது என்ற விஷயம்! மேலும் சுவாரசியமானவை.. சமீபத்திய 10 பதிவுகள்
|
முகப்புப் பக்கத்திலிருந்து..
|