![]() |
![]() |
நடராஜன் பிரேக்-டவுன்: ‘டவுன் பஸ்’ போல தஞ்சையில் ஓடியதால்!Viruvirupu, Wednesday 25 April 2012, 13:34 GMT
சசிகலா ‘உள்ளே’ சென்றும், அவரது கணவரும், சகோதரனும் ‘வெளியே’ வருவதற்கு இன்னமும் வேளை வரவில்லை. திருச்சி சிறையில் இருக்கும் நடராஜனின் காவல், வரும் மே மாதம் 7-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. திவாகரன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திவாகரன், அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுதான் இன்று டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளது. அரசுத் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்திருந்தால், ஜாமீன் கிடைத்திருக்கும். என்ன செய்வது, காலம் கனியவில்லை. நடராஜன் விவகாரம் என்ன? அவரே கணக்கு வைத்துக் கொள்ள முடியாதபடி, பல்வேறு வழக்குகள் அவர்மீது உள்ளன. இதனால் நடராஜனும் சிறைக்கும் கோர்ட் வளாகத்துக்கும் இடையே கிட்டத்தட்ட டவுன் பஸ் போல ஷட்டில் அடித்துக் கொண்டிருந்தார். அதையடுத்து, பல்வேறு வழக்குகளில் ஆஜராக அடிக்கடி அலைவதால் தமக்கு உடல்நிலை பாதிக்கிறது என்ற புகாரை போலீஸில் எழுத்து மூலம் கொடுத்தார் அவர். பாவம், அவருடைய கவலை அவருக்கு. அப்படி என்ன கவலை? அவருடைய மனைவி சசிகலாவும் அடிக்கடி கோர்ட்டுக்கு செல்கிறார். நடராஜனும் அடிக்கடி கோர்ட்டுக்கு செல்கிறார். அவர் மீதும் கிரிமினல் கேஸ், இவர் மீதும் கிரிமினல் கேஸ். ஆனால் சசிகலா சொகுசு காரில் சென்று, நட்சத்திர ஹோட்டலில் தங்கி, விசாரணைக்கு செல்கிறார். நடராஜனுக்கு கிடைத்திருப்பதோ, போலீஸ் வேனும், நாயர் கடை டீயும்! கணவனுக்கும் மனைவிக்கும் இடையே விசாரணையில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்ற காரணம் எல்லாம் சட்டத்தில் செல்லுபடியாகாது. ஆனால், அடிக்கடி அலைவதால் உடல்நிலை பாதிக்கிறது என்ற காரணம் நடராஜனுக்கு கை கொடுத்துள்ளது. நடராஜன் இன்று சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணையில் முகம் காட்டினார். விசாரணை ஹை-டெக்காக இருந்தாலும், நீதிபதியின் தீர்ப்பு, “உங்களுக்கு காவல், வரும் மே மாதம் 7-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது” என்றுதான் வந்திருக்கிறது. LATEST ON VIRUNEWS
|
UPDATES
|