உலகம்

“சுஷ்மா சுராஜ் கூறுவது பொய்” இலங்கை அரசு வட்டார QUOTING!

Viruvirupu, Wednesday 25 April 2012, 05:14 GMT

இலங்கை சென்ற இந்திய எம்.பி.க்கள் குழுவின் தலைவி சுஷ்மா சுராஜ், “இலங்கை ஜனாதிபதியுடன் பேசாத விஷயத்தை பேசியதாக, பொய் அறிக்கை வெளியிட்டார்” இவ்வாறு இலங்கை அரசு அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது கொழும்பில் இருந்து வெளியாகும் தி ஐலன்ட் ஆங்கிலப் பத்திரிகை.

இந்தப் பத்திரிகை, அநேக விஷயங்களில் இலங்கை அரசின் கருத்துக்களை சரியாகத் தெரிவிக்கும், அரசு ஆதரவு பத்திரிகை.

“இலங்கை ஜனாதிபதி, தமிழர் பிரச்னையை தீர்க்கும் விஷயத்தில் 13-வது சட்டத் திருத்தம் (இது இந்தியாவால் தயாரிக்கப்பட்டது) கவனத்தில் கொள்ளப்படும் என உறுதியளித்தார். இவ்வாறு இலங்கை வந்த இந்திய எம்.பி.க்கள் குழுவின் தலைவி சுஷ்மா சுராஜ் தெரிவித்திருந்தது முழுப் பொய் என்று இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சனிக்கிழமை காலை சுஷ்மா சுராஜ் மற்றும் இந்திய எம்.பி.க்களை ஜனாதிபதி சந்தித்தபோது, 13-வது சட்ட திருத்தம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனேவுக்கு இந்தியா நெருக்கடி கொடுத்தது என்றுதான் கூறினார். குறித்த சந்திப்பில் இந்திய எம்.பி.க்கள் மற்றும், கொழும்பில் உள்ள இந்திய தூதர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

13-வது சட்டதிருத்தத்தை தாம் அமல் படுத்துவதாக ஜனாதிபதி ராஜபக்ஷே தெரிவிக்கவே இல்லை. இதை இலங்கை அரசுத் தரப்பில் இருந்து எம்மிடம் உறுதிப்படுத்தினார்கள்” என்று கூறியிருக்கிறது ஐலன்ட் பத்திரிகை.

சுஷ்மா சுராஜ், வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை இரு தினங்களிலும் இரு தடவைகள் இலங்கை ஜனாதிபதியை சந்தித்தார். வெள்ளிக்கிழமை தனிமையிலும், சனிக்கிழமை அவரது சக குழுவினருடன் சேர்ந்தும் அந்த சந்திப்புகள் நடைபெற்றன. இரு சந்திப்புகளிலும் 13-வது சட்டத்திருத்தத்தை அமல் படுத்துவதாக யாரும் உறுதி அளிக்கவில்லை என்று இலங்கைப் பத்திரிகை அடித்துக் கூறுகிறது.

இலங்கை அரசு, அதை மறுக்கவில்லை.

இலங்கையில் இருந்து திரும்பிவிட்ட சுஷ்மா சுராஜ், டில்லியில் இருக்கிறார். இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே அரசு முறை பயணமாக தென் கொரியாவின் சோல் நகரில் இருக்கிறார். தி ஐலன்ட் பத்திரிகையின் ஆசிரியர் கொழும்புவில் இருக்கிறார்.

யாராவது ஒருவர் வாய் திறந்து சொன்னால்தான், உண்மை தெரியவரும்!

Follow viruvirupu on Twitter
∇ LATEST UPDATES ∇
பிரீமியம் கட்டுரைகள்>Ⓟ
ISIS இயக்கம் சுடச்சுட, துப்பாக்கியே தொட்டிராத ராக் இசை குழுவுக்கு அச்சுறுத்தல் மேல் அச்சுறுத்தல்!!Ⓟ Saturday 23 August 07:48 GMT
ISIS தொடர்பான உளவுத் தகவல்களுக்கு சி.ஐ.ஏ. நம்பும் மூன்று உளவுத் துறைகள் எவை தெரியுமா? Saturday 23 August 07:11 GMT
பேரன் உதயநிதி ஸ்டாலின் அங்கு வந்து குதித்தது எப்படி என்பது தாத்தா கருணாநிதி காதுக்கு போயே போய்விட்டது!Ⓟ Saturday 23 August 06:29 GMT
கொல்லப்பட்ட ஹமாஸ் தளபதிகளின் மறைவிடங்கள் பற்றி இஸ்ரேலுக்கு தகவல் கொடுத்தது யார்?Ⓟ Saturday 23 August 06:00 GMT
சைக்கிள் ஏற மறுத்த முதல்வர் விக்கிக்கு அனந்தி செம கிண்டல்! சைக்கிள் ஓடிக் காட்டினார்!!Ⓟ Saturday 23 August 04:51 GMT
கனேடிய பிரதமருடன் செல்ல சீன மீடியா நிருபர்களுக்கு தடை! சீன உளவாளிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம்!! Saturday 23 August 03:24 GMT
புரட்சித்தலைவி ஆட்சியில் தமிழக விவசாயிகள் மில்லியனர்கள்! வெள்ளை வேட்டியுடன் விவசாயம்!!Ⓟ Saturday 23 August 02:54 GMT
தமிழக காங்கிரஸ் தமாஷ் மியூசிகல் சேர்: லேட்டஸ்ட் ரவுன்டில் வாசனும், ஞானதேசிகனும்!Ⓟ Friday 22 August 09:00 GMT
கொல்லப்பட்ட அமெரிக்க செய்தியாளரின் குடும்பத்துக்கு ISIS அனுப்பிய எச்சரிக்கை இமெயில்Ⓟ Friday 22 August 07:19 GMT
விஜய்யின் கத்தி, லைக்கா போஸ்டர்கள் மீது வீர வேங்கைகளின் அக்கினாஸ்திர அதிரடி தாக்குதல்!Ⓟ Friday 22 August 06:20 GMT