![]() |
![]() |
போட்டோக்களில் ஜனாதிபதிக்கு அருகே காணப்பட்ட மர்ம இளம் பெண் இவர்தான்!Viruvirupu, Wednesday 25 July 2012, 13:56 GMT
கடந்த ஆண்டு டிசெம்பரில் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங்-இல், பிரத்தியேக ட்ரெயினில் செல்லும்போது திடீரென மாரடைப்பில் இறந்தார். ஆனால், அவர் இறந்த செய்தி அதி ரகசியமாக வைக்கப்பட்டு, 48 மணி நேரத்தின் பின்னரே அறிவிக்கப்பட்டது. காரணம், அவரது இளைய மகன் கிம் ஜொங்-உன், ‘தடைகள் சிலவற்றை அகற்றிவிட்டு’ தலைமைப் பொறுப்பை ஏற்க கால அவகாசம் தேவைப்பட்டது. இன்று காலை திடீரென வட கொரிய அரசு வானொலியில் ஒரு அறிவிப்பு. “ஜனாதிபதி கிம் ஜொங்-இன், ஒரு திறப்பு விழா நிகழ்ச்சியில் தமது மனைவியுடன் கலந்து கொண்டார்” என்றது. ஜனாதிபதி எப்போது திருமணம் செய்து கொண்டார் என்பது யாருக்கும் தெரியாது! இதுகூட ரகசியம். ஆனால், இந்த விவகாரம் கடந்த சில வாரங்களாகவே ஒருவித வதந்தி நிலையில் இருந்தது. ஜனாதிபதி கிம் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் அனைத்திலும் எடுக்கப்பட்ட போட்டோக்களில் அவருடன் ‘அடையாளம் காணப்படாத’ பெண் ஒருவர் காணப்பட்டார். “யார் அவர்?” என்று வட கொரியாவின் போட்டி நாடான தென் கொரியாவின் மீடியாக்கள் பரபரத்தன. ஆனால், யாருக்கும் பதில் தெரியவில்லை. புதிய காதலி என்றன சில மீடியாக்கள். சகோதரி என்றார்கள் சிலர். கிம் பதவிக்கு வருமுன் வட கொரிய பாடகி ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அவர்தான் இவர் என்றும் எழுதியது சோல் ஹெரால்டு பத்திரிகை. இப்போது, “ஜனாதிபதி தமது மனைவி ரி சொல்-யு சகிதம் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்” என்ற ஒரு வாக்கியத்துடன், நாட்டின் தலைவரது திருமணத்தை முடித்துக் கொண்டது வட கொரிய அரசு வானொலி. LATEST ON VIRUNEWS
|
UPDATES
|