![]() |
![]() |
புதுக்கோட்டை: தேர்தல் கமிஷன் TIMELINE அமைச்சர்களுக்கு கிடையாது!Viruvirupu, Wednesday 25 April 2012, 01:52 GMT
Chennai, India: The bypoll to the Pudukottai Assembly constituency will be held on June 12, the Election Commission announced yesterday (Tuesday). The bypoll has been necessitated following the death of CPI legislator S.P. Muthukumaran in a road mishap on April 1. Counting of votes will take place on June 15.புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கு தேதி குறிக்கப்பட்டு விட்டது. புதுக்கோட்டையில் வரும் ஜூன் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, அ.தி.மு.க. தவிர்ந்த மற்றைய அரசியல் கட்சிகளுக்கு ஜூரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூரம், தேர்தலில் எப்படி ஜெயிப்பது என்பதற்காக அல்ல. தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா என்று முடிவு செய்வதற்கு. போட்டியிட்டால் 2-ம் இடத்தை எப்படி பெறுவது என்பதற்கு! தேர்தலில், வெற்றி பெறுவது பற்றி எதிர்க்கட்சிகள் கவலைப்பட வேண்டியது அவசியமில்லை. அந்தக் கவலையை 30-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. அமைச்சர்கள் பார்த்துக் கொள்வார்கள். தேர்தல் கமிஷன் தமது தேர்தல் அறிவிப்புடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. அதன் டெக்னிகலான அர்த்தம், இந்த அறிவிப்பின் பின், அ.தி.மு.க. அரசு இந்தத் தொகுதிக்கு மட்டும் நலத் திட்டங்களை கொண்டுபோய் திணிக்க முடியாது. ஆனால் ரியாலிடியில், “தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன” என்ற அறிவிப்பில் அர்த்தம் ஏதும் கிடையாது. இவர்களது அறிவிப்பு வருவதற்கு முன்னரே, புதுக்கோட்டை தொகுதிக்கு என்று சிறப்பு முறையில் 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் எல்லாம் வேகமாக நடைபெறுகின்றன. தேர்தல் கமிஷனின் அறிவிப்பின் பின்னரும் இந்தப் பணிகள் தொடர முடியும். காரணம், தேர்தல் கமிஷன் அறிவிப்புக்கு முன்னரே துவங்கிவிட்ட பணித்திட்டம் அது. தேர்தல் கமிஷனால் சட்டப்படி அதை தடுக்க முடியாது. “234 தொகுதிகளில் ஒரு தொகுதியிலாவது பராமரிப்பு பணிகள் நடக்கட்டுமே” என்று விட்டுவிட வேண்டியதுதான். தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள டைம்-லைனின் படி, இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மே 18-ம் தேதி துவங்குகிறது. மனு தாக்கலுக்கான கடைசி நாள் மே 25-ம் தேதி. மனுக்கள் மே 26ம் தேதி பரிசீலிக்கப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் மே 28-ம் தேதி. ஜூன் 12-ம் தேதி வாககுப் பதிவு நடக்கும். ஜூன் 15-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். அதுவரைதான் தேர்தல் கமிஷனால் தேதி குறிக்க முடியும். நம்ம அமைச்சர்கள் எந்த தேதியில் தொகுதிக்குள் செல்வார்கள், எந்த தேதியில் வீடு பிடிப்பார்கள், எத்தனை நாள் புதுக்கோட்டை மக்களுடன் தங்கியிருப்பார்கள் என்பதற்கெல்லாம் தேர்தல் கமிஷனால் டைம்-லைன் போட்டு கொடுக்க சட்டத்தில் இடமில்லை. திரும்பிப் பாருங்கள்:இன்டிகோ, தெரிந்துதான் வருகிறார்களா? அகலக் கால் வைக்கிறார்களா?LATEST UPDATES
|
ஸ்டார் கட்டுரைகள்
போட்டோ எஸ்ஸே
LATEST UPDATES
|