ராஜிவ் கொலை வழக்கு: மூவரையும் டில்லி கொண்டுசெல்ல முயற்சி தீவிரம்!

The Supreme Court yesterday (Tuesday) was hearing a petition filed by L.K. Venkat, President of G.K. Moopanar Peravai, affiliated to the Congress party seeking transfer of the petitions to the Supreme Court on the ground that the atmosphere in the High Court was not conducive for a fair hearing.
Viruvirupu, Wednesday 25 April 2012, 02:49 GMT

New Delhi, India: The Supreme Court yesterday (Tuesday) reserved its verdict on the plea to transfer the petitions filed by three convicts facing death sentence in the Rajiv Gandhi assassination case — Santhan, Murugan and Perarivalan — from the Madras High Court to the Supreme Court.

The Bench was hearing a petition filed by L.K. Venkat, President of G.K. Moopanar Peravai, affiliated to the Congress party seeking transfer of the petitions to the Supreme Court on the ground that the atmosphere in the High Court was not conducive for a fair hearing.

ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற மூவரின் (சாந்தன், முருகள், பேரறிவாளன்) விசாரணையை சென்னை ஹைகோர்ட்டில் இருந்து டில்லி சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்ற மனு, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனு மீதான விவாதங்களை கேட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்க்வி, எஸ்.ஜே.முக்ஹோபாடயா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைத்துள்ளது. குறிப்பிட்ட மனு, ஜி.கே.மூப்பனார் பேரவையையின் தலைவர் எல்.கே.வெங்கட் என்பவரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

“சென்னை ஹைகோர்ட்டில் ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள் நடைபெறும்போது, தூக்கு தண்டனை பெற்றவர்களுக்கு ஆதரவாக ஏராளமானவர்கள் திரண்டு கோஷம் இட்டு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

இதனால் இந்த விசாரணை சென்னையில் நடைபெறுவதால், தூக்குத் தண்டனை பெற்றவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகிறது. அதனால், வழக்கை டில்லிக்கு மாற்ற வேண்டும்” என்பதே ஜி.கே.மூப்பனார் பேரவை தலைவரின் மனு.

தூக்குத் தண்டனை பெற்ற மூவரின் சார்பில், பிரபல வக்கீல் ராம் ஜெத்மலானி ஆஜராகி, இந்த வழக்கை சென்னையில் இருந்து டில்லிக்கு மாற்றக்கூடாது என்று வாதிட்டார்.

தமிழக அரசின் சார்பில் அடிஷனல் அட்வகேட் ஜெனரல் குரு கிருஷ்ணகுமார் ஆஜரானார். தமிழக அரசின் நிலைப்பாடும், இந்த வழக்கை சென்னையில் இருந்து டில்லிக்கு மாற்றக்கூடாது என்பதே.

ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டவர்களுக்கு ஆதரவான வழக்கு சென்னையில் நடைபெற்றபோது, கோர்ட்டில் ஏராளமான ஆதரவாளர்கள் கூடினர். தமிழ் இன உணர்வு அமைப்புகளும் அதில் கலந்து கொண்டன. மூவருக்கும் வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.

“இதனால், மக்களின் ஆதரவு மூவருக்கும் வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற ரீதியில் இருப்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுகிறது. அது நியாயமல்ல” என்பதே ஜி.கே.மூப்பனார் பேரவை தலைவரின் வாதம்.

ஜி.கே.மூப்பனார் பேரவை, காங்கிரஸ் கட்சியின் துணை அமைப்புகளில் ஒன்றாக செயல்படும் ஒரு பிரிவு.

இந்த அமைப்பின் பெயரில் உள்ள ஜி.கே.மூப்பனார், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட தினத்தன்று, குண்டு வெடித்த மைதானத்துக்கு ராஜிவ் காந்தியை அழைத்து வந்தவர். அந்த மைதானத்துக்கு அருகே வரை ராஜிவ் காந்தியுடன் இணைந்து வந்தார் அவர். ஆனால், மேடை வரை கூடவே செல்லாமல், பாதியில் ராஜிவ் காந்தியில் இருந்து விலகி, ஒரு மரத்தின் கீழ் காத்திருக்க, மேடைக்கு அருகே நடந்த குண்டுவெடிப்பில் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார்.

ஜி.கே.மூப்பனாரின் இளவல் ஜி.கே.வாசன், தற்போது மத்திய அரசில் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக உள்ளார்.

தழிழக அரசு எதிர்க்கும் நிலையிலும், மூவர் மீதான வழக்கு விசாரணையை டில்லிக்கு கொண்டு செல்வதில் இன்னமும் தீவிரமாக உள்ளது ஜி.கே.மூப்பனார் பேரவை.

திரும்பிப் பாருங்கள்:

ராஜிவ் காந்தி கொலை: பரபரப்பான விமான நிலையத்தில் காத்திருந்த இரு எதிரிகள்!

விமான நிலையத்தில் மரகதம் சந்திரசேகருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் இரு பிரதான தலைவர்களான வாழப்பாடி ராமமூர்த்தி, ஜி.கே. மூப்பனார் (இருவருமே தற்போது உயிருடன் இல்லை) ஆகியோரும் காத்திருந்தனர். இந்த இருவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் என்றாலும்….

Please join with VIRUVIRUPU:
VIRUVIRUPUon Google+
UPDATES
இலங்கை அரசு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனை கழட்டி விட தயாராகிறது! Saturday 25 May 13:38 GMT
Porn star Priya Rai into Tamil films! – Will Priya be the next Sunny Leone? Saturday 25 May 13:05 GMT
ராமதாஸை நலம் விசாரிக்க, ஸ்டாலினும் கனிமொழியும் சென்றார்களே… ஏன்? Saturday 25 May 12:53 GMT
பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன் இன்று பிற்பகல் சென்னையில் மரணம் Saturday 25 May 12:18 GMT
கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்! Saturday 25 May 11:55 GMT
Canada immigration alert: Good News on Sponsorship! Saturday 25 May 08:38 GMT
World’s fastest & largest smartphone launched in Dubai Saturday 25 May 07:05 GMT
ஹிஸ்பொல்லாவை அதன் குகைக்குள் வந்து தாக்கி அதிர வைக்கும் திட்டம்! Saturday 25 May 06:10 GMT
பிரிட்டிஷ் போர் விமானங்கள் எஸ்கார்ட் செய்து தரையிறக்கிய பாகிஸ்தான் விமானம்! Saturday 25 May 04:03 GMT
மருமகன் மெய்யப்பன் கைது: மாமனார் சீனிவாசன், “இந்தப் பருப்பெல்லாம் இங்கே வேகாது” Saturday 25 May 02:31 GMT