![]() |
![]() |
விண்வெளி சென்ற முதல் அமெரிக்க பெண் சாலி ரைட், மரணம்!Viruvirupu, Tuesday 24 July 2012, 03:23 GMT
விண்வெளிக்கு சென்ற முதல் அமெரிக்கப் பெண் சாலி ரைட், மரணமடைந்தார் என்ற தகவலை நாசா நேற்று (திங்கட்கிழமை) மாலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, “சாலி ரைட் ஒரு தேசிய வீராங்கனையாக மதிக்கப்படுவார்” என அறிவித்துள்ளார். சான்-டியாகோவில் உள்ள சாலி ரைட்டின் அலுவலகம், இவர் பன்கிரியாட்டிக் கேன்சர் நோய் காரணமாக மரணமடைந்தார் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. சாலிக்கு வயது 61. சாலி ரைட் விண்வெளிக்கு சென்றது, 1983-ம் ஆண்டு. அப்போது அமெரிக்கா வானில் வெற்றகரமாக ஏவிய ‘சேலஞ்சர்’ விண்கலத்தில், முதல் அமெரிக்க பெண்ணாக சாலி பயணித்தபோது அவருக்கு வயது 32. சாலி ரைட், மொத்தம் 343 மணி நேரம் விண்வெளியில் இருந்துள்ளார். இவர் பயணித்த விண்கலம் சிக்கல் ஏதுமின்றி தரையிறங்கியது. ஆனால், அதற்கு அடுத்த விண்கலம் சேலஞ்சர் 1986-ல் விண்வெளிக்கு ஏவப்பட்டபோது, 73 விநாடிகளிலேயே வெடித்து சிதறியது. அதில் இருந்த 7 விண்வெளி வீரர்களும் உயிரிழந்தனர். LATEST UPDATES
|
ஸ்டார் கட்டுரைகள்
போட்டோ எஸ்ஸே
LATEST UPDATES
|