![]() |
![]() |
News Brief: 007 JAMES BOND வேலை காட்டும் அ.தி.மு.க.வினர்!Viruvirupu, Friday 24 February 2012, 08:22 GMT
சங்கரன்கோவில், இந்தியாசங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்ற குழப்பத்தில் இருந்து, ஒருவழியாக போட்டியிடும் முடிவை எடுத்து, வேட்பாளரையும் தி.மு.க. அறிவித்துவிட்டது. இனி தேர்தல் வேலைகளை தொடங்க வேண்டியதுதானே… ஆனால் கட்சிக்குள் வேறு ஒரு முணுமுணுப்பு கிளம்பியுள்ளது. லோக்கல் கட்சிக்காரர் ஒருவர், “தலைவருக்கென்ன, வேட்பாளரை அறிவித்து விட்டார். இப்போது நாங்கள் அல்லவா வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கிறோம்” என்றார். என்ன விவகாரம் என்று விசாரித்தால், அ.தி.மு.க.-வினர் தி.மு.க. வேட்பாளருக்கு எதிராக வில்லங்கமான விவகாரம் ஒன்றை துருவத் தொடங்கியிருக்கிறார்களாம். விவகாரம் வேறென்ன, தி.மு.க. பாரம்பரியத்துக்கு உகந்த விஷயம்தான். நில அபகரிப்பு! அ.தி.மு.க. வட்டாரங்களில், துப்பறியும் சுறுசுறுப்புடன் தகவல்களை சேகரித்துக் கொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரிடம் கேட்டபோது, விவகாரத்தின் அவுட்லைன் சொன்னார். “தி.மு.க. வேட்பாளர் ஜவகர் சூரியகுமார், மறைந்த முன்னாள் மத்திய மந்திரி அருணாசலத்தின் அண்ணன் மகன். முன்னாள் மத்திய அமைச்சருக்கு சொந்தமான நிலம் ஒன்று, தமது பெயருக்கு உயில் எழுதப்பட்டுள்ளதாக க்ளெய்ம் பண்ணியிருக்கிறார் ஜவகர் சூரியகுமார். ஆனால், இவரது கையில் உள்ள பத்திரங்கள் போலி என்பது, மறைந்த அமைச்சரின் மனைவியின் குற்றச்சாட்டு. இந்த விவகாரத்தில் தி.மு.க. வேட்பாளர் சிக்கிக் கொள்வார் என்று நாம் எதிர்பார்க்கிறோம். அதற்கான ஆதாரங்களை திரட்டிக்கொண்டு இருக்கிறோம்” என்றார் அ.தி.மு.க. பிரமுகர். அ.தி.மு.க. இந்த விவகாரத்தில் தீவிர நாட்டம் காட்டுவதால், வேட்பாளரை மாற்றலாம். அல்லது போட்டியில் இருந்து வேறு காரணம் சொல்லி ஒதுங்கிக் கொள்ளலாம் என்று தி.மு.க. தலைமைக்கு அட்வைஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. LATEST ON VIRUNEWS
|
UPDATES
|