உலகம்

எல்லை அருகே ஒரு ரகசிய சப்ளை சென்டர்! மூன்று நாடுகள் ரகசிய டீல்!!

Viruvirupu, Monday 06 August 2012, 07:30 GMT

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தம் நடந்தபோது, பல நாடுகள் வெவ்வேறு விதமாக உதவின என்று சொல்லப்பட்டது. இருப்பினும், எப்படி உதவினார்கள் என்ற கதை பெரியளவில் வெளியே வரவில்லை. காரணம், இன்டர்நேஷனல் மீடியாவின் கவனம், இலங்கை யுத்தத்தில் பெரிதாக பதியவில்லை.

ஆனால், சிரியாவில் தற்போது நடக்கும் உள்நாட்டு யுத்தத்தில் கதை வேறு! உலக மீடியா முழுவதும் அங்கே, காதுகளையும் கண்களையும் திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்கின்றன.

இதனால் பல ரகசியங்கள், உத்தரவு போட்ட எக்கோ மறைவதற்கு முன்னரே வெளியே தெரியவந்து விடுகின்றன. அந்த வகையில் வெளியான ரகசியம் ஒன்று இது.

சிரியா அரசுக்கு எதிராக போராடும் போராளி அமைப்புக்கு உதவி செய்வதற்காக, துருக்கி ரகசிய ஆபரேஷன் சென்டர் ஒன்றை சிரியா நாட்டு எல்லைக்கு அருகே அமைத்துள்ளது.

துருக்கி – சிரியா எல்லை

துருக்கியையும், சிரியாவையும் ஒரு எல்லை பிரிக்கிறது. துருக்கியின் தெற்குப் பகுதியில் உள்ள நகரமான அடானா, சிரியாவின் எல்லையில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த நகரத்தில்தான் இயங்குகிறது, ரகசிய ஆபரேஷன் சென்டர். சிரியாவுக்குள் யுத்தம் புரியும் போராளி அமைப்புடன் நேரடி வயர்லெஸ் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

யுத்தம் புரியும் போராளி அமைப்புக்கு ராணுவ ஆலோசனைகள் இங்கிருந்து வழங்கப்படுகின்றன. அவர்கள் தம்மிடம் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்கள் கையிருப்பு குறைவதை இந்த ரகசிய சென்டருக்கு அறிவித்தால், உடனே சிரியாவின் எல்லைக்கு சப்ளை அனுப்பி வைக்கப்படுகிறது.

அத்துடன் யுத்தத்தில் காயமடையும் போராளிகளுக்கு தேவையான மருந்துப் பொருள்களும், இந்த ஆபரேஷன் சென்டரில் இருந்தே போகின்றன.

துருக்கி தமது நாட்டுக்குள் வைத்து இயக்கும் அந்த ரகசிய ஆபரேஷன் சென்டருக்கு, சவுதி அரேபியா மற்றும் கத்தார் ஆகிய இரு நாடுகளும் மறைமுகமாக நிதி மற்றும் ஆயுத உதவிகளை செய்வதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் ஆஃப்கோர்ஸ், இப்படி ஒரு ரகசிய ஆபரேஷன் சென்டர் இயங்குவதை மூன்று நாடுகளும் மறுத்திருக்கின்றன!

Follow viruvirupu on Twitter
∇ LATEST UPDATES ∇
பிரீமியம் கட்டுரைகள்>Ⓟ
அன்பு வாசகர்களுக்கு எமது இனிய தீபாவளி வாழ்த்துக்கள் – ரிஷி & விறுவிறுப்பு.காம் டீம் Wednesday 22 October 01:44 GMT
பிரிட்டிஷ் ரியேப்பர் ட்ரோன் உளவு விமானங்கள் முதல் தடவையாக சிரியாவுக்கு மேலே பறக்க ரெடிⓅ Tuesday 21 October 14:23 GMT
கத்திக்கு பிரச்னை தீரலை! தீபாவளிக்கு சீமான் இல்லாத குறையை போக்க இதோ வேல்முருகன்!!Ⓟ Tuesday 21 October 10:11 GMT
9/11: விடை தெரியாத சில கேள்விகள், வில்லங்கமான சில பதில்கள், மேலும் சில மர்மங்கள்-11Ⓟ Tuesday 21 October 06:42 GMT
தொடர் முன்னோட்டம்: தமிழக ‘திரைமறைவு’ அரசியலில் நமது காதுக்கு வந்து சேரும் விஷயங்கள் Tuesday 21 October 06:07 GMT
அம்மா ரிலீஸூக்கும் கத்தி ரிலீஸூக்கும் நோ கனெக்ஷன்! இப்போ இது ‘வேறு’ வெவகாரம்!!Ⓟ Monday 20 October 17:46 GMT
ஈழப் போரின் இறுதி நாட்கள்-44: வன்னியில் விடுதலை புலிகளின் இறுதி நாட்களில் நடந்தவை-9Ⓟ Monday 20 October 15:17 GMT
சிரியாவில் ஆயுத மழை! C-130 விமானத்தில் இருந்து பெட்டி பெட்டியாக விழும் ஆயுதங்கள்!Ⓟ Monday 20 October 08:22 GMT
மலேசியா விமானம் MH17 மர்மம்: ஜேர்மன் உளவுத் துறையிடம் ‘ஏதோ’ ரகசியம் உள்ளது!Ⓟ Monday 20 October 07:59 GMT
சுவீடன் கடலடியே ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை எப்படி ட்ராக் பண்ணியது உளவுத்துறை?Ⓟ Monday 20 October 02:33 GMT