NEWS BRIEF: ராணுவ அதிகாரி பெயரில் போலி Facebook அக்கவுண்ட்!

Viruvirupu, Sunday 11 March 2012, 07:14 GMT

அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி ஒருவரின் பெயரில் போலி Facebook அக்கவுண்ட் ஒன்றைத் திறந்த விஷயம் உண்மைதான் என்று நேட்டோ படைத் தலைமையகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளது. உளவுத்துறை வட்டாரங்களில், இந்த போலி Facebook அக்கவுண்ட்டை திறந்தது அநேகமாக சீன உளவுத்துறையில் கைங்கார்யமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நேட்டோ படை ஆபரேஷனில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்க ராணுவ அதிகாரி ஜேம்ஸ் ஸ்ட்ராவ்டில் பெயரிலேயே Facebook-ல் போலி கணக்கு ஒன்று தொடங்கப்பட்டிருந்தது. அதில், அவரது ராணுவ பதவி நிலை எல்லாம், துல்லியமாக குறிப்பிடப்பட்டு, நேட்டோ ஆபரேஷன் தொடர்பாக அவர் எழுதுவதாக சில குறிப்புகளும் இடம் பெற்றிருந்தன.

இதையடுத்து நேச நாட்டு ராணுவத் தளபதிகள் சிலர், இந்த Facebook பக்கத்தில் கருத்துப் பரிமாற்றமும் செய்யத் தொடங்கியிருந்தனர். அதில், நிஜமான பிரிட்டிஷ் ராணுவத் தளபதிகள் சிலரும் அடக்கம்.

இந்த கருத்துப் பரிமாற்றங்களில், பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் சிலரது இ-மெயில் அட்ரஸ்கள் மற்றும் போன் நம்பர்களும் போலி அக்கவுண்டை நடத்தியவருக்கு போய்ச் சேர்ந்துள்ளது. அவர்களுடன் ‘சாட்’  மூலம் பொதுப்படையான சில ராணுவ உரையாடல்களையும் நடத்தியுள்ளார் போலி ஜேம்ஸ் ஸ்ட்ராவ்டில்.

இந்த விவகாரம் முதலில் பிரிட்டனின் சன்டே டெலிகிராஃப் பத்திரிகையில் வெளியானபோது, நேட்டோ ராணுவத் தலைமை அதை ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், இன்று முதல் தடவையாக அது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.

இப்போது அமெரிக்க ராணுவ அதிகாரி ஜேம்ஸ் ஸ்ட்ராவ்டில் பெயரில் நிஜமான Facebook கணக்கு திறக்கப்பட்டுள்ளதாகவும், போலிக் கணக்கு மூடப்பட்டு விட்டதாகவும் நேட்டோ தலைமையகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது!

Please join with VIRUVIRUPU:
VIRUVIRUPUon Google+
LATEST UPDATES
Follow viruvirupu on Twitter
ஸ்டார் கட்டுரைகள்
போட்டோ எஸ்ஸே
LATEST UPDATES
போட்டோ எஸ்ஸே: உத்தரகான்ட் மாநிலத்தில் கன மழை! மோசமான வெள்ளப்பெருக்கு!! Wednesday 19 June 13:08 GMT
வட கொரிய ‘பகுதி நீர்மூழ்கி’ படகுகள் ரகசியமாக தென் கொரிய கடலில் ஊடுருவல்? Wednesday 19 June 12:12 GMT
அமெரிக்கா – தலிபான் பேச்சுவார்த்தை நாளை கத்தார், தோஹா நகரில் ஆரம்பம்! Wednesday 19 June 11:16 GMT
ராஜ்ய சபாவில் ஒரு ‘சிங்கிள்’ சீட்: அதற்கு கரணம் போடும் தி.மு.க.வும், தே.மு.தி.க.வும்!! Wednesday 19 June 07:46 GMT
“விமானம் விற்றுக் கொடுத்த கமிஷனை தராமல் ஏமாற்றி விட்டார் இளவரசர்” அடேங்கப்பா டீல்! Wednesday 19 June 04:43 GMT
பாரிஸ் ஏர்-ஷோ: ரங்கநாதன் தெரு வியாபாரம் போல விமானம் வாங்க வந்த கூட்டம் இது! Wednesday 19 June 00:24 GMT
எட்வார்ட் ஸ்னோடன் ஏற்கனவே அமெரிக்காவில் சீன உளவாளியாக இருந்தாரா? Tuesday 18 June 15:30 GMT
உளவுத்துறை மொசாத் தலைவர் தனி விமானத்தில் போன ரகசிய ட்ரிப்! என்ன விவகாரம்? Tuesday 18 June 13:29 GMT