“டில்லி வேண்டாம்; தமிழக அரசுடன் டீல் வைத்துக் கொள்வோம்” -இலங்கை

Viruvirupu, Tuesday 24 April 2012, 07:40 GMT
Sri Lanka should foster diplomatic relations with Tamil Nadu than with New Delhi given its importance to country’s national interests, a senior Minister said yesterday (Monday). He said that no government either past or present had understood the importance of developing a sound relationship with Tamil Nadu.

New Delhi, India: Sri Lanka should foster diplomatic relations with Tamil Nadu than with New Delhi given its importance to country’s national interests, a senior Minister said yesterday (Monday).

Sri Lankan senior Minister D.E.W. Gunasekera, who delivered the Memorial Lecture for late Minister Lalith Athulathmudali in Colombo yesterday, said that no government either past or present had understood the importance of developing a sound relationship with Tamil Nadu. He pointed out that no Tamil Nadu Chief Minister had visited Sri Lanka since independence while no ministerial team from Sri Lanka had visited the South Indian state to date.

இலங்கை அரசு இந்தியாவுடன் டீல் பண்ணும்போது, மத்திய அரசைவிட தமிழக அரசுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இலங்கை, தமிழக அரசுடன் நெருங்கிய ஒறவை வளர்த்துக்கொள்ள வேண்டும்” இவ்வாறு கூறியிருக்கிறார் இலங்கையின் சீனியர் அமைச்சர் ஒருவர்.

“தமிழக அரசுடன் இலங்கை ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ள இலங்கை அமைச்சர் டி.யு.குணசேகர, தமிழகத்தின் முக்கியத்துவத்தை இலங்கையில் முன்பு இருந்த அரசாங்கங்களோ, தற்போதைய அரசாங்கமோ உணரவில்லை.

அதனால்தான், இலங்கை சுதந்திரம் அடைந்த 1948-ம் ஆண்டின்பின், தமிழக முதலமைச்சர் எவரும் இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை. இலங்கை அமைச்சர்கள் எவரும் அதிகாரபூர்வ விஜயமாக தமிழகம் சென்றதில்லை” என்று கூறியிருக்கிறார்.

கொழும்புவில் நேற்று (திங்கட்கிழமை) மறைந்த அமைச்சர் லலித் அத்துலத்முதலி நினைவு தினத்தில் கலந்துகொண்ட போதே, அமைச்சர் குணசேகர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையின் வட பகுதியிலுள்ள மக்களுக்கும், தமிழ் நாட்டிலுள்ள மக்களுக்கும் இடையில், மொழி, கலாசாரம் உள்ளிட்ட பல விடயங்களில்தொடர்புகள் உள்ளன.  தமிழகத்துக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே வெறும் 35 கி.மீ. மட்டுமே இடைவெளி உள்ளது. இதை இலங்கை அரசு உணர தவறிவிட்டது” என்றும் அவர் பேசினார்.

தற்போதைய அரசில் அங்கம் வகிக்கும் சீனியர் அமைச்சர் ஒருவர் இவ்வாறு பேசியிருப்பது கொழும்பு அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த அமைச்சர் அத்துலத் முதலியின் நினைவுகள் பற்றி அமைச்சர் குணசேகர பேசியபோதும், இந்தியா தொடர்பான உதாரணங்களைக் காட்டியே பேசினார். ராஜிவ் காந்தி தலைமையிலான மத்திய அரசு, யாழ்ப்பாணத்திற்கு விமான மார்க்கமாக உதவிப் பொருட்களை வானில் இருந்து போடுவதற்கு தீர்மானித்தபோது லலித் அத்துலத்முதலி அதை எவ்வாறு ராஜதந்திர ரீதியாக கையாண்டார் என்பதையும் அமைச்சர் குணசேகர நினைவு கூர்ந்தார்.

“ராஜிவ் காந்தி தலைமையிலான அரசு ‘இலங்கை அரசு அனுமதி கொடுக்காவிட்டாலும், இலங்கை ஏர்-ஸ்பேஸில் விமானங்களை கொண்டுவந்து யாழ்ப்பாணத்தில் உணவுப் பொருட்களை போடப்போகிறோம்’ என்று எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது.

அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கு அன்றைய இந்திய பிரதமர்  ராஜீவ் காந்தியே நேரடியாக இது பற்றி எச்சரித்து கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதற்கு இலங்கை ஜனாதிபதி அனுப்பிய பதிலை, ராஜதந்திர ரீதியில் எழுதிக் கொடுத்தவர் மறைந்த அமைச்சர் லலித் அத்துலத் முதலிதான்” என்றும் கூறினார் குணசேகர.

அந்தக் கடிதம் நிஜமாகவே, ராஜதந்திர ரீதியான விளைவுகளை ஏற்படுத்திய கடிதம்தான். இந்தியா, தமது ராணுவத்தை (அமைதிப்படை) இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயத்தை அந்தக் கடிதம் மூலம் ஏற்படுத்தியது  இலங்கை அரசு.

இறுதியில், விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவம் தாக்காமல்,  இந்திய ராணுவத்தை கொண்டே தாக்க வைத்தது ராஜதந்திரம் இல்லையா?

புதுடில்லியோடு டீல் பண்ணியவரை எல்லாமே இலங்கைக்கு வெற்றியாக இருந்திருக்கலாம். ஆனால், தமிழக அரசுடன் நெருக்கத்தை ஏற்படுத்த யோசிக்கிறார்களே… அங்கேதான் நிஜமான சிக்கலை சந்திப்பார்கள்!

Follow viruvirupu on Twitter
∇ LATEST UPDATES ∇
பிரீமியம் கட்டுரைகள்>Ⓟ
கொழும்புவில் இருந்து கிளம்பிய சீன நீர்மூழ்கி, இந்திய கப்பல்களை ‘பெட்டி’ அடிக்கவா?Ⓟ Friday 24 October 08:33 GMT
கொபானியில் திருப்பம்: அமெரிக்க ஆதரவு போராளிக்குழு FSA நகருக்குள் போய் இறங்குகிறது!Ⓟ Friday 24 October 04:10 GMT
ஆன்-தி-ஸ்பாட் வீடியோ: கனேடிய நாடாளுமன்றம் முன்னால் நடந்த தீவிரவாத தாக்குதல்Ⓟ Friday 24 October 03:34 GMT
இந்தியாவின் வியட்நாம் – இலங்கையில் இந்திய அமைதிப் படை – 20Ⓟ Friday 24 October 01:17 GMT
ஞாயிற்றுக் கிழமை எத்தனை பெண்கள் சவுதி வீதிகளில் கார் செலுத்த போகிறார்களோ!Ⓟ Thursday 23 October 16:34 GMT
தமிழக ‘திரைமறைவு’ அரசியலில் நமது காதுக்கு வந்து சேரும் விஷயங்கள்-1Ⓟ Thursday 23 October 15:55 GMT
பாகிஸ்தான் விஞ்ஞானி கானின் அணுகுண்டு: ராஜதந்திர, உளவு, & வியாபார எபிசோட் – 21Ⓟ Thursday 23 October 14:01 GMT
நேற்று கனேடிய நாடாளுமன்ற வாயில் வரை துப்பாக்கியுடன் வந்துவிட்ட தீவிரவாதம்!Ⓟ Thursday 23 October 02:55 GMT
முதலாவது பிரமாண்ட ரயில் கொள்ளை-19: The Great Train Robbery (1855)Ⓟ Wednesday 22 October 10:03 GMT
சுவீடன் கடலடியே மர்ம நீர்மூழ்கி கப்பல்: கடல் மட்டத்துக்கு கொண்டுவர போகிறது சுவீடன்!Ⓟ Wednesday 22 October 08:47 GMT