ராணுவம்

அமெரிக்க ராணுவம் ஆயிரக்கணக்கில், ஜப்பானில் இருந்து கிளம்புகிறது!

Viruvirupu, Friday 27 April 2012, 08:39 GMT

Tokyo, Japan: Japan and the US have agreed to relocate thousands of US marines from Okinawa in a move aimed at reducing the island’s military burden amid lingering anger among residents over pollution, accidents and crime.

Under a deal reached in Washington late on Thursday, about 9,000 marines will move from the southern Japanese island to the US Pacific territory of Guam and other locations in the region, including Hawaii and Australia. No date has been given for the $8.6bn (£5.3bn) move – of which Japan will pay $3.1 billion.

ஆயிரக் கணக்கான அமெரிக்க கடற்படையினரை ஜப்பானில் இருந்து வெளியேற்றும் ஒப்பந்தம் ஒன்று நேற்று (வியாழக்கிழமை) செய்யப்பட்டுள்ளதாக டோக்கியோவும், வாஷிங்டனும் அறிவித்துள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி, சுமார் 9,000 கடற்படையினர் ஜப்பானிய தெற்கு தீவு ஒகினாவாவில் இருந்து முதல் கட்டமாக வெளியேற்றப்படுவார்கள்.

வெளியேற்றப்படும் அமெரிக்க கடற்படையினர், குவம் (Guam) கடற்படை தளத்துக்கு பிரதானமாகவும், ஹவாய் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள அமெரிக்க கடற்படை தளங்களுக்கு சிறிதளவிலும் பிரித்து அனுப்பி வைக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.

ஜப்பானின் ஒகினாவா தீவில் அமெரிக்க ராணுவத்தளம் நீண்ட காலமாக உள்ளது. அங்கு சுமார் 19,000 கடற்படையினர் உள்ளனர். ஜப்பானின் பாதுகாப்புக்காகவே அங்கு தளம் அமைத்து, ஜப்பானை பாதுகாத்து வருகிறோம் என்று அமெரிக்கா கூறிவந்தது. ஆனால், அமெரிக்க ராணுவத்தினர் அங்கு அதிகளவில் உள்ளதால், ஜப்பானியர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்றும், குற்றச்செயல்கள் அதிகமாகின்றன என்றும், ஜப்பானுக்குள் எதிர்ப்புக் குரல்கள் எழத் துவங்கியிருந்தன.

ஒகினாவாவில் உள்ள அமெரிக்கத் தளம், முழுமையாக எப்போது அகற்றப்படும் என்பதற்காக இறுதித் தேதி ஏதும் இன்னமும் குறிக்கப்படவில்லை.

பசுபிக் கடல் பகுதியில் அமெரிக்க கடற்படைக்கு மிக வசதியான ஒரு ட்ரான்சிட் கடல் தளமாகவும் ஒக்னாவா இருந்தது. அதாவது இந்த தளம் இங்கு இருப்பது, அமெரிக்காவுக்குதான் அதிக நன்மை.

அமெரிக்காவின் ஒகினாவா தளம் முழுவதையும் அங்கிருந்து அகற்றுவதற்கு 8.6 பில்லியன் டாலர் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, இந்தத் தொகையில் 3.1 பில்லியன் டாலரை ஜப்பான் கொடுக்க வேண்டும். மீதிப் பணத்தை அமெரிக்கா பார்த்துக் கொள்ளும்!

ஒட்டகத்தை கூடாரத்தில் இருந்து வெளியேற்றுவதற்கும் பணம் கொடுக்க வேண்டும்.

திரும்பிப் பாருங்கள்:

தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்!

Follow viruvirupu on Twitter
LATEST UPDATES
பிரீமியம் கட்டுரைகள் Ⓟ அடையாளத்துடன்
அன்று எம்.ஜி.ஆரிடம் கணக்கு கேட்ட கருணாநிதியிடம் இன்று சொத்து கணக்கை கேட்கிறார் கட்ஜு!Ⓟ Thursday 24 July 14:04 GMT
வைகைச்செல்வனின் ஆதரவு நிர்வாகிகள் அதிரடி நீக்கம்! விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆதிக்கம்!!Ⓟ Thursday 24 July 13:52 GMT
இன்று காணாமல் போய், தேடப்பட்டு வருவதாக கூறப்பட்ட அல்ஜீரிய விமானம் விபத்துக்குள்ளானது! Thursday 24 July 13:34 GMT
பாகிஸ்தான் விஞ்ஞானி கானின் அணுகுண்டு: ராஜதந்திர, உளவு, & வியாபார எபிசோட் – 08 Thursday 24 July 06:32 GMT
தயாநிதி – கலாநிதி சகோதரர்கள் கூண்டேறும் பாக்கியம் இதோ வருகிறது! சிக்னல் விழுந்துவிட்டது!!Ⓟ Thursday 24 July 05:58 GMT
துருக்கியில் உளவு பார்த்த 9 முன்னாள் உளவுத்துறை அதிகாரிகள் எஸ்கேப்! 105 பேர் கைது!!Ⓟ Thursday 24 July 05:48 GMT
லண்டனுக்கு மேல் பறந்த கல்ஃப்ஸ்ட்ரீம் விமானத்தை வானில் இடைமறித்த பிரிட்டிஷ் போர் விமானங்கள்Ⓟ Thursday 24 July 05:00 GMT
தமிழக அரசியல் சர்ச்சைகளில் தற்போது பரபரப்பாக அடிபடும் இந்த மார்க்கண்டேய கட்ஜு யார்? Thursday 24 July 03:11 GMT
பா.ஜ.க. அரசின் லேட்டஸ்ட் ராணுவ வியாபார ஐடியா: சாமி.. நம்ம வண்டியும் ஓடும்னு சொல்றீக?Ⓟ Thursday 24 July 03:02 GMT
‘சிதம்பர ரகசியங்களை’ டில்லியில் ‘படார் படார்’ என போட்டு உடைக்கிறது வாசன் குரூப்!Ⓟ Thursday 24 July 02:04 GMT
காசாவில் ஹமாஸ் இயக்கத்தின் மெயின் கமாண்ட் சென்டர் காலி என்கிறது இஸ்ரேல்! ஆ! அப்படியா?Ⓟ Thursday 24 July 01:39 GMT
MH17-க்கும் இதுதான் நடந்ததா? 269 பயணிகளுடன் வானில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்ட KAL007 மர்மம் Wednesday 23 July 16:55 GMT
தாய்வானில் விமான விபத்து! ரன்வேயில் 1வது லேன்டிங் தவறியபின் ஏற்பட்ட விபத்துⓅ Wednesday 23 July 16:50 GMT
ISIS இயக்க வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய, இளம் சவுதி டாக்டரின் இரு போட்டோக்கள்!Ⓟ Wednesday 23 July 15:16 GMT
முன்னாள் நீதிபதி கட்ஜு மீது கருணாநிதி பாய்ச்சல்: ஜெ. புகழ் பாட மீடியாவுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்! Wednesday 23 July 14:36 GMT