ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்காக லண்டனில் மெகா சைஸ் McDonald’s!

Viruvirupu, Monday 23 April 2012, 17:00 GMT
The biggest McDonald's restaurant in the world will open during the London 2012 Olympic games. More than 50,000 Big Mac burgers and 180,000 portions of fries will be served from the outlet in east London. The huge branch will have seating for 1,500 customers and will employ 2,000 staff.

London, UK: The biggest McDonald's restaurant in the world will open for six weeks during the London 2012 Olympic games. More than 50,000 Big Mac burgers and 180,000 portions of fries will be served from the outlet in Stratford, east London. The huge temporary branch will have seating for 1,500 customers and will employ more than 2,000 staff.

அமெரிக்க ஃபாஸ்ட் ஃபூட் செயின் McDonald's-க்கும், ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? McDonald's, தமது உலகின் மிகப்பெரிய ரெஸ்ட்டாரன்டை லண்டனில், ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்காக திறக்கப் போகின்றது. இது இப்போதைய தொடர்பு. இவர்களுக்கு இடையே 1960களின் இறுதியில் இருந்தே தொடர்பு உள்ளது.

1968-ம் ஆண்டின் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரான்ஸின் Grenoble நகரில் நடந்தது. அதில் கலந்துகொண்ட அமெரிக்க விளையாட்டு வீரர்களுக்கு பிரெஞ்ச் உணவு சரிப்பட்டு வரவில்லை. ஒலிம்பிக்ஸ் வில்லேஜ் குடியிருப்பில் அமெரிக்க உணவு என்று தயாரித்து கொடுக்கப்பட்ட உணவை, விசித்திர ஜந்துவைப் பார்ப்பதுபோல பார்த்தார்கள் அமெரிக்க விளையாட்டு வீரர்கள்.

இந்த விவகாரம் பத்திரிகைகளில் வெளியாகியதில், அமெரிக்காவில் பரபரப்பு. உடனே களத்தில் இறங்கிய McDonald's, தமது சொந்த தயாரிப்பு ஹம்பர்கர்களை விமானங்கள் மூலம் அனுப்பி வைத்தது. இது அந்த நாட்கனில், McDonald's நிறுவனத்துக்கு அட்டகாசமான விளம்பரத்தை தேடித் தந்ததுடன், அமெரிக்க உணவு என்றாலே McDonald's ஹம்பர்கர் என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தியது.

1976-ல் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் மொன்ட்ரியோலில் (கனடா) நடந்தபோது, முதல் தடவையாக ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு அதிகாரபூர்வ ஸ்பான்ஸர் ஆகியது McDonald's. 1984-ல், லாஸ் ஏஞ்சலஸில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்ற போது, நீச்சல் போட்டிகளுக்கான ஸ்விம்மிங் ஸ்டேடியத்தை முழுமையாக கட்டிக் கொடுத்ததும் McDonald's நிறுவனம்தான்.

ஹம்பர்கர் விற்ற காசில் இவ்வளவையும் செய்த அவர்கள், 2012 ஒலிம்பிக்ஸில் ஹம்பர்கர் விற்பதற்காக தமது மிகப்பெரிய உணவகத்தை அமைக்கிறார்கள். 2012 ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறும்போது மட்டுமே இயங்கவுள்ள தற்காலிக உணவகம் இது. மொத்தம் 6 வாரங்கள்  திறந்திருக்கும்.

1,500 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து உணவு உண்ணும் அளவுக்கு இடவசதியுடன், இரண்டு தளங்களில் உருவாகிறது இந்த ரெஸ்ட்டாரன்ட். 2,000 பேர் பணிபுரிவார்கள். கிழக்கு லண்டனின் ஸ்ட்ரட்ஃபோர்ட்டில், ரெஸ்ட்ராரன்ட் அமைக்கும் வேலைகள் முழுமூச்சில் நடைபெறுகின்றன.

லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகள், McDonald's நிறுவனம் official restaurant என்ற வகையில் செயற்படும் 9-வது ஒலிம்பிக்ஸ் தொடர். 2012 லண்டன் ஒலிம்பிக்ஸில், விளையாட்டு வீரர்களுக்கு உணவு வழங்கவுள்ள ஒரேயொரு பிரான்டட் ஃபூட் செயினும் இவர்கள்தான்!

லண்டனில், ஜூலை 27-ம் தேதி முதல், செப்டெம்பர் 9-ம் தேதிவரை நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொள்ள வரும் விளையாட்டு வீரர்கள், பிளஸ் பொதுமக்களுமாக, 3 மில்லியன் பேர் McDonald's உணவகத்தில் ஒரு நேரமாவது உணவு உண்ண வருவார்கள் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.

2,000 பேருக்கு வேலை வாய்ப்பு உள்ளதாக செய்யப்பட்ட விளம்பரத்துக்கு 12,912 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பிரிட்டிஷ்காரர்கள் கொஞ்சம் தற்பெருமைக்காரர்கள். அதனால், McDonald's அமெரிக்க ஃபூட் செயினாக இருந்தாலும், அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் 17,500 பிரிட்டிஷ், மற்றும் ஐரிஷ் பண்ணைகளில் இருந்தே பெறப்படும் என்று விளம்பரம் செய்கிறார்கள். அவர்களுக்கு சந்தோஷம், இவர்களுக்கு லாபம்.

பிய்ஜிங்கில் (சீனா) 2008 ஒலிம்பிக்ஸ் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜெயதித்த ‘உலகின் வேகமான மனிதன்’ யார் என்று தெரியுமா? Usain Bolt. ஜமேக்கா நாட்டு விளையாட்டு வீரர். அவர் ஒரு பேட்டியில் தெரிவித்த விஷயம், “McDonald's தயாரித்து விற்கும் சிக்கன் மக்நகெட்ஸ் (Chicken McNuggets) தான் எனது வெற்றியின் ரகசியம்”

அவர் நிஜமாகவே McNuggets சாப்பிட்டுவிட்டு போட்டியில் கலந்து கொண்டாரா தெரியாது. ஆனால், McDonald's லண்டனில் உருவாக்கும் மெகா உணவகத்தில், தினமும் 75,000 McNuggets தயாரிக்க வசதிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்கள். (அத்துடன், 50,000 Big Mac burgers, 180,000 portions of fries வரை தயாரிக்க வசதிகள் உண்டு)

Follow viruvirupu on Twitter
∇ LATEST UPDATES ∇
பிரீமியம் கட்டுரைகள்>Ⓟ
தமிழக ‘திரைமறைவு’ அரசியலில் நமது காதுக்கு வந்து சேரும் விஷயங்கள்- எபிசோட் 15Ⓟ Saturday 28 February 09:04 GMT
ஆபரேஷன் இலங்கை: ராஜதந்திரத்தில் தொடங்கி துப்பாக்கி வரை சென்ற இந்தியா!-34Ⓟ Saturday 28 February 07:54 GMT
இலங்கையின் போர் குற்றம்: கருணா அம்மான் கூறும் இந்த விஷயம் கொஞ்சம் வில்லங்கமே!Ⓟ Friday 27 February 15:12 GMT
ராணுவ மர்மம்: தென்சீன கடல் மேல் பறந்த அமெரிக்க வேவு விமானத்தில் பிலிப்பீன்ஸ் வீரர்கள்!Ⓟ Friday 27 February 13:29 GMT
பாரிஸ் நகர உளவு விமான பறத்தல்: ‘எதிர்பாராத’ நபர்கள் கைது – மூன்று அல்-ஜசீரா செய்தியாளர்கள்!Ⓟ Friday 27 February 12:43 GMT
ஸ்பை கேபிள்-6: FIRST CLASS விமான பணிப்பெண்களை ‘மயக்கும்’ மொசாத் ஏஜென்ட்டுகள்!Ⓟ Friday 27 February 00:20 GMT
ஸ்பை கேபிள்-5: அல்-காய்தாவின் ரகசிய ‘மினி கடற்படை’ அல்லது ‘மரண மரைன் யூனிட்’Ⓟ Friday 27 February 00:10 GMT
விடுதலை புலிகளின் ‘ஆள்’ இறக்கிய விமானத்தை பறித்த ராஜபக்ஷேவின் கூட்டாளி சிக்கலில்!Ⓟ Thursday 26 February 16:54 GMT
ஸ்பை கேபிள்-4: வெவ்வேறு நாடுகளில் மொசாத் செய்த வெவ்வேறு ரகசிய லீலைகள்-AⓅ Thursday 26 February 15:58 GMT
ஸ்பை கேபிள்-3: இரு நாட்டு உளவுத்துறைகளுக்கு இடையே ஏற்பட்ட உரசல் சம்பவம் அம்பலம்Ⓟ Thursday 26 February 14:51 GMT